வாழ்வியல்

தோல் சுருக்கத்தை தடுக்கும் பச்சை பட்டாணி!

வைட்டமின் கே சத்து அதிகம் நிறைந்த பச்சைப் பட்டாணி தொடர்ந்து சாப்பிட்டால் தோல் சுருக்கங்கள், எலும்புகள் நோய்கள் வராது. மேலும் விபரம் அறியத் தொடர்ந்து படியுங்கள்.

மனிதர்களின் உடலுக்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது எலும்புகள். அவை ஒரு மனிதனுக்கு பலமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியம். பச்சைப் பட்டாணியில் வைட்டமின் கே சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது.

சருமம் மனிதர்களுக்கு இளமை காலங்களில் தோலில் பளபளப்பும் இளமை தன்மையும் அதிகம் இருக்கும். வயது ஏறிக்கொண்டு செல்லும் காலத்தில் தோலில் சுருக்கங்கள் விழ ஆரம்பிக்கும். இந்நிலைக்கு முக்கிய காரணம் நமது உணவில் மக்னீசியம் சத்து குறைவதே ஆகும். பச்சைப் பட்டாணியில் இந்த மக்னீசியம் அதிகமுள்ளது.

பட்டாணியைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தோல் சுருக்கங்கள் ஏற்படுவது தள்ளிப்போகிறது. நார்ச்சத்து நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் நார்ச்சத்து இருப்பது அவசியமாகும். இந்த நார்ச்சத்து தான் நமது உணவு எளிதில் செரிமானம் ஆகி மலச்சிக்கல், வயிறு கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது. தினமும் அல்லது வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை பச்சைப் பட்டாணி சாப்பிடுபவர்களுக்கு நார்ச்சத்து அதிகம் கிடைப்பதால் செரிமான கோளாறுகள் ஏதும் ஏற்படாமல் தடுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *