செய்திகள்

தொழில் முனைவோர் – புத்தாக்கம் ஓராண்டு சான்றிதழ் படிப்பு பயிற்சி வகுப்புகள்

Makkal Kural Official

இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தகவல்

சென்னை, அக். 15–

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் தொடர்பான ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு மற்றும் அகமதாபாத் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் இணைந்து ‘தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்’ என்ற ஓராண்டு சான்றிதழ் படிப்பினை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 14–ம் தேதி முதல் இதற்கான வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. “தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்”என்ற ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்கான கட்டணமாக ரூ.80 ஆயிரம்- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐடிஐ, 10–ம் வகுப்பு, 12ம் வகுப்பு படித்திருப்பதுடன், தொடர்புடைய பயிற்சியில் 2 வருட அனுபவத்துடன் இருப்பவர்கள் தகுதியானவர்கள். இதில் பயன்பெற https://oneyearcourse.editn.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

எனவே, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள தொழில் முனைவோர் இந்த ‘தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்’ ஓராண்டு சான்றிதழ் படிப்பில் சேர்ந்து பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்: 86681 01638, 86681 07552, 93424 92214, மின்னஞ்சல் முகவரி: academy@editn.in.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *