செய்திகள்

தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் ரூ.100 கோடி நிதி உதவி

Spread the love

‘கொரோனா வைரஸ்’ பாதிப்பு :

தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் ரூ.100 கோடி நிதி உதவி

சென்னை, ஏப். 2–

‘கொரோனா வைரஸ்’ நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ, பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு லட்சுமி மிட்டல் குரூப் தலைவர் லட்சுமி என். மிட்டல் ரூ.100 கோடி வழங்கி உள்ளார்.

கோவிட்-19 நோய் குறித்த அச்சத்தால் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மிக அதிக மக்கள் தொகை கொண்டதும், தனது வளர்ச்சியின் மிக முக்கியமான கட்டத்தில் இருப்பதுமான இந்தியாவில் இந்த பாதிப்புகள் இன்னும் அதிகமாகவே இருக்கும்.

எங்களது ஆர்சிலர் மித்தல்நிப்பான் ஸ்டீல் நிறுவனங்களின் கூட்டணியில் தற்போது உருவாகியுள்ள நிறுவனமும், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் மித்தல் எனர்ஜி கூட்டணியில் உருவான (HMEL) நிறுவனமும் சேர்ந்து – இந்த வைரஸ் பாதிப்பினால் தற்போது முடங்கியுள்ள இந்தியாவைப் பாதுகாக்கும் பணி வலுவூட்ட சிறப்பு நிதி ரூ. 100 கோடியை வழங்குகிறது என்றார் லட்சுமி மிட்டல். இது தவிர இந்த நிறுவனம் ஐந்தாயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு அன்றாட உணவு கிடைக்க உதவுவதுடன், முப்பதாயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தாங்களே உணவு தயாரித்துக் கொள்வதற்கு தேவையான பொருட்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது எங்களது உற்பத்தியாலைகள் அமைந்துள்ள பகுதிகளில் போதுமான நிவாரண மையங்கள் அமைக்கவும், அப்பகுதியினரின் அவசரத் தேவைக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாங்கள் செயல்படும் பகுதிகளில், வாழும் மக்களிடையே இந்த நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தேவையான தகவல்களைப் பகிரவும், அதற்கு தேவைப்படும் சோப்பு, கிருமி நாசினி உள்ளிட்ட பிற தற்காப்பு சாதனங்கள் கொண்ட தொகுப்புகளை வழங்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. அதோடு, எங்களது பணியாளர்கள் அனைவருக்கும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அவர்களது ஊதியத்தை தொடர்ந்து வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள தனி நபர்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் இந்த நேரத்தில் பல்வேறு விதமான சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், எங்களது நிறுவனங்களும் ஒரு சிறிய பங்கை அளிக்க முடிவதில் நான் மிகுந்த பெருமை அடைகிறேன்.

மனித குலத்தின் புத்திக் கூர்மை அளப்பறியது. எனக்கு எப்போதும் அதில் மிகுந்த நம்பிக்கை உண்டு. அதனால், இந்த அவசரக் காலத்தில், நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றினால், கட்டாயமாக வெற்றி பெற முடியும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் இந்த நேரத்தில் தங்களது அசாத்தியமான ஈடுபாட்டையும், மன உறுதியையும், சக மனிதரிடம் கனிவையும் காட்டி வருகின்றனர். நம் அனைவருக்கும் எதிரான ஒற்றை சவாலை எதிர்கொள்ளும் இந்தப் போரில் பங்கேற்கும் அனைவருக்கும் எங்களது ஆதரவும், இந்த நாட்டின் நன்றியும் எப்போதும் உண்டு.

இவ்வாறு இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *