வாழ்வியல்

தொல்லை கொடுக்கும் நோய்களில் இருந்து பெண்களைக் காப்பாற்றும் கருணைக் கிழங்கு

பெண்களுக்குத் தொல்லை கொடுக்கும் நோய்களில் வெள்ளைப்பாடு என்ற நோய்க்குக் கைகண்ட மருந்தாக உதவுகிறது பிடிகருணைக் கிழங்கு. உடல்வலி ,மூலம் இருந்தால் கூடப் போக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. பிடிகருணைக் கிழங்குடன் புளி சேர்த்து சமைத்துசாப்பிட்டாலும் தொல்லை கொடுக்கும் நோய்களில் இருந்து பெண்களையும் ஆண்களையும் காப்பாற்றும்.

சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கருணைக் கிழங்கு லேகியம் பிரசித்தி பெற்றது. மூல நோய்க்கு மருந்தாகும் இந்த லேகியம் தயாரிக்க,இந்தக் கிழங்கு தான் பிரதானமாகப் பயன்படுகிறது.

காராக் கருணை பெரிய அளவில் ஒரு ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்கும். அதன் மேல்பாகம் கரடு முரடாக இருக்கும். இதைச் சேனைக் கிழங்கு என்று சொல்லுவார்கள். இந்தக் கிழங்கில் காரல் இருக்காது.

இதில் மாவு – புரதச் சத்துக்கள் உள்ளன. அத்துடன் சிலவகை வைட்டமின்களும் உள்ளன.

இதன் மேல் தோலைச் சீவி விட்டு நறுக்கிச் சமைக்கலாம். இதை வைத்து குழம்பு, பொரியல், பருப்பு சேர்த்துக் கூட்டாகச் செய்யலாம். அல்லது எண்ணெயில் வறுத்துச் சிப்ஸாகச் சாப்பிடலாம். இது சாப்பிட ருசியாகவும் இருக்கும்.

காரும் கருணைக்கு இருப்பது போன்ற மருத்துவக் குணங்கள் இதற்கும் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *