அறிவியல் அறிவோம்
தொலைந்து போன அல்லது திருடுபோன செல்போனைக் கண்டறிய வாரணாசி ஐஐடி மாணவர் புதிய செயலியை கண்டுபிடித்துள்ளார்.
செல்போனை தொலைத்தால் நாம் படும் வேதனை நமக்குத்தான் தெரியும் . இந்தத் துன்பத்தை அனுபவித்த ஒருவர் அதைக்கண்டுபிடிப்பதற்கான வழியையும் கண்டுபிடித்துவிட்டார்.
தொலைந்து போன , திருடப்பட்ட செல்போனை கண்டறிய, வாரணாசி ஐஐடி மாணவர் புதிய செயலியை கண்டுபிடித்துள்ளார். இந்த செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.நமது செல்போன் தொலைந்து போனபின் அந்த செயலியைத் தொடர்பு கொண்டு கேட்டால் நமது போன் எங்கு யாரிடம் இருக்கிறது?அவர் அதை என்ன செய்து வைத்திருக்கிறார்? அதிலிருந்து யாரிடம் எவ்வளவு நேரம் அவர் பேசியிருக்கிறார் ? என்ற விபரத்தை துப்பறியும் சிங்கம் போல் அந்த செயலி காட்டிவிடும்.