வாழ்வியல்

தொற்று நோய்களைத் தடுக்கும் பலாப்பழம்

பலாப்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் இதைச் சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும்.

முக்கனிகளுள் ஒன்றாக கருதப்படும் பலாப்பழம் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் சுளைகள் சுவையாகவும் கண்ணை கவரும் வண்ணத்திலும் இருக்கும்.

வைட்டமின் ‘சி’ அதிகமாக உள்ளதால், மிகச்சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயலாற்றுகிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் நோய்த்தொற்று உண்டாகாமல் தடுக்கிறது.

வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது.

பலாச்சுளைகளில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *