வாழ்வியல்

தொற்று நோய்களைத் தடுக்கும் காராமணி

காராமணி அல்லது பயத்தங்காய் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். இந்தக் காய் பசியைத் தூண்டி நீரைப் பெருக்கும். கபத்தை அகற்றும்.

இதைப் பருப்புடன் சேர்த்து கூட்டு செய்தோ, கறி செய்தோ சாப்பிடலாம்.

காராமணியில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக் கூடியது. அடிக்கடி காராமணி சாப்பிட்டால் தொற்று நோய்கள் எளிதில் அண்டாது.

காராமணியில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியைக் அதிகரிக்கும். அடிக்கடி காராமணி சாப்பிட்டால் தொற்று நோய்கள் எளிதில் அண்டாது. கர்ப்பிணிகளுக்கு அவசியத் தேவையான ஃபோலேட் சத்து காராமணியில் நிறைய உண்டு.

ஃபோலேட் சத்து நிறைந்த உணவுகள்தான் பிறக்கும் குழந்தையை நரம்பு மண்டலக் கோளாறுகள் இல்லாமல் காக்கும்.

பயத்தங்காயிலுள்ள நார்ச்சத்தானது எடைக் குறைப்புக்கு உதவி, நீரிழிவைக் கட்டுப் படுத்தி, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *