செய்திகள்

தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் ஒரே நாளில் 1½ லட்சம் பேர் பயணம்

சென்னை, அக்.22-

சென்னையில் இருந்து அரசு பஸ்களில் ஒரே நாளில் 1½ லட்சம் பேர் பயணம்

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் அறிவுறுத்தலின்படி, வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் ஆயுதபுஜை விடுமுறையை முன்னிட்டு பொது மக்களின் வசதிக்காக கடந்த 20-ந் தேதி (நேற்று முன்தினம்) சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 100 பஸ்களுடன் கூடுதலாக 651 பஸ்கள் இயக்கப்பட்டன.

அதன்படி, நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 305 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து 21-ந் தேதி (நேற்று) தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 100 பஸ்களுடன் சென்னையில் இருந்து கூடுதலாக 950 பஸ்கள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்டன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை குறித்து போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பயணிகளின் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப 950 பஸ்கள் கூடுதலாக இயக்க திட்டமிட்டுள்ள நிலையில், சுமார் 700 பஸ்களாவது இயக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்படி, சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *