சென்னை, மார்ச். 9–
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5வது நாளாக உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று ஒரு சவரன் ரூ.49 ஆயிரத்தை கடந்து விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.360 உயர்ந்து ரூ.49,200க்கும், ஒரு கிராம் ரூ.6,150க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,750 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து இருப்பது மக்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தங்கம் விலை இனி குறைய வாய்ப்பு இல்லை. மேலும் உயரவே வாய்ப்பு உள்ளது. ஒரு பவுன் தங்கம் விரைவில் ரூ. 50 ஆயிரத்தை தாண்டும்” என நகைக்கடை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
வெள்ளியின் விலை கிராமிற்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.79.20 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.79 ஆயிரத்து 200க்கு விற்கப்படுகிறது.