தேனி, மே 11–
சங்கரன்கோயில் அருகே 100 வயது மூதாட்டியை நாய் கடித்து குதறியதில், மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்.
தேனி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே 100 வயது மூதாட்டி பாப்பாத்தி என்பவர் நாய் கடித்து குதறி உள்ளது. அருகில் இருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மூதாட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீசார் வழக்குப்பதிவு
தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக சங்கரன்கோவில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
முன்னதாக, சென்னையில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை 2 நாய்கள் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து நாயின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். நாயிடம் கடி வாங்கிய சிறுமி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று சென்னை ஆலந்தூரில் 11 வயது சிறுவனை நாய் ஒன்று கடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தேனி மாவட்டம் சங்கரன் கோயிலில் மூதாட்டியை நாய்கள் கடித்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.