சென்னை, செப். 1–
தமிழ்நாடு கோவில் தொழிலாளர்கள் யூனியன் சென்னை கோட்டத்தின் எழும்பூர் –- திரு.வி.க நகர் கிளையின் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்தான ஆலோசனை கூட்டம் சூளை கந்தன் தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் வளாகத்தில் கிளை கௌரவத் தலைவர் ஜனார்த்தனம் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு கௌரவத் தலைவர் வேலாயுதம், சென்னை கோட்டத் தலைவர் எஸ்.தனசேகர், செயலாளர் இரா.ரமேஷ், கொள்கை பரப்பு செயலாளர் க.வெங்கடேசன், பொருளாளர் து.தனசேகர் மற்றும் மாநில மகளிர் அணி செயலாளர் செந்தமிழ்ச்செல்வி உயர்மட்ட குழு உறுப்பினர் அ.முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு கிளையின் செயல்பாடுகள், சங்கத்தின் வளர்ச்சி பணிகள், புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து நிர்வாகிகளிடையே ஆலோசனை மேற்கொண்டு கிளை நிர்வாகிகளின் ஒப்புதலோடு மாற்றி அமைத்தனர்
அதன்படி எழும்பூர் –- திரு.வி.க நகர் கிளை புதிய நிர்வாகிகளாக :- கௌரவ தலைவராக டி.ஜெனார்தனம், தலைவராக, எக்மோர் என்.சக்திவேல், செயலாளராக ஜெயகுமார், பொருளாளராக எல்.கலைவேந்தன், அமைப்பாளராக சு.கார்த்திகேயன், கொள்கை பரப்பு செயலாளராக சூலை எஸ்.சங்கர், மகளிரணி செயலாளராக ஆர்.தீபா, துணைத் தலைவர்களாக த.சுரேஷ்குமார், புரசைவாக்கம் அசோக், துணைச் செயலாளர்களாக டி.குருபிரகாஷ், பலராமன், துணை அமைப்பாளர்களாக சந்தோஷ், மகேந்திரன், மணிமேகலை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர், அவர்களுக்கு சென்னை கோட்ட நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் இக்கூட்டத்தில் கோயில் பணியாளர்களை முழு நேர அரசு ஊழியர்களாக்க வேண்டும், அரசு பணியாளர்கள் போன்று கோயிலில் உழைக்கும் தற்காலிக தொகுப்பூதிய பெண் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு தர வேண்டும் கோயில் அருகிலேயே பணியாளர் குடியிருப்பு கட்டி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இறுதியில் கிளை அமைப்பாளர் கார்த்திக் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.