சிறுகதை

தையல் மிஷின் – ராஜா செல்லமுத்து

பால்பாண்டி ஒரு டெய்லர். தையல் கடை என்று எதுவும் வைக்காமல் தலையிலேயே மிஷினை ஊர் ஊராகத் தூக்கிக் காெண்டு போய் தையல் தைப்பவர். வெயில் காெளுத்தும் இந்தக் காேடை காலத்தில் வியர்க்க வியர்க்க தையல் மிஷினைத் தலையில் தூக்கி வைத்துக் காெண்டு அவர் பாடிவரும் அழகைப் பார்த்து நிறையப் பேர் மெய்மறந்து பால்பாண்டியின் பாட்டைக் கேட்டு நிற்பார்கள்.

ஐயா எப்படி உங்களுக்கு இப்படி பாட்டு வருது ….ஆத்துல வெள்ளம் பாேறது மாதிரி மடை திறந்த வெள்ளமா பாடுறீங்களே எப்பிடி? என்று ஊர் மக்கள் கேட்டால், அதற்கு அவர் தெரியாது என்றே பதில் சாெல்வார்

அவரு சாெல்றது நெசந்தான். அவர் தலையில் மிஷினைத் தூக்கி வச்சா பாட்டு அவருக்கு எங்கிருந்து வருதுன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, இந்த மனுசன் இப்பிடி வெயில்ல தூக்கி அலையுற துக்குக்குப் பலன் இல்லையே? இப்பவெல்லாம் யாரு மெஷின்ல துணி தச்சு பாேடுறாங்க. எல்லாம் ரெடிமேட் துணிதான் வாங்கிப் பாேடுறாங்க.. இவரு தான் இந்தத் தொழில விடாம இன்னும் அப்படியே புடிச்சிட்டு இருக்காரு என்று சிலர் பால்பாண்டியைக் கேட்கவும்

ஐயா இந்த மெஷினைத் தூக்கித் தலையில் வச்சு செய்கிற வேலை இன்னைக்கு நேத்து செய்யலைய்யா மூணு தலைமுறையா செஞ்சுகிட்டு இருக்கோம். எங்க தாத்தா, எங்க அப்பன், அப்புறம் நான். இத விட என்னால முடியலையா என்று பரிதாபமாகச் சொன்னார் பால்பாண்டி .

அது சரிய்யா உங்களுக்கு இதுல வருமானம் ஏதும் வருதா ? இத வச்சி எப்படி நீங்க சாப்பிடுறீங்க ? என்று கேட்டபோது அதற்கு பதில் சொல்ல முடியாமல் தலையை மட்டுமே ஆட்டினார் பால்பாண்டி.. குடுகுடுப்பைக்காரன் கிட்ட போயி என்ன சம்பாதிக்கிறீங்கன்னு கேட்டா அவன் என்ன பதில் சொல்லுவான். அது அவனுடைய வாக்கு .அவனுடைய குடும்ப பின்புலம், பின்னணி அத வச்சுத்தான் அவன் காசு பணம் சம்பாதிக்கிறான்னு இல்ல. அது ஒரு தெய்வச் செயலாக நினச்சு பண்ணிக்கிட்டு இருக்கான் .அது மாதிரி தான் ஐயா நானும் .

என்னை எல்லாரும் கிறுக்கு பய மாதிரி பாட்டு பாடிட்டு போறான்னு சொல்லுவாங்க . அது எதுக்குன்னு தெரியுமா ஐயா. இந்த மெஷினோட வெயிட் 20 கிலோவுக்கு மேல இருக்கும் .அதைதூக்கி தலையில் வச்சு தெருத்தெருவாக சுமக்கும் போது கழுத்து வலியும் கால் வலியும் உயிர் போயிரும்யா.

அது தெரியாம இருக்கிறதுக்கு தான் அந்த பாட்ட பாடிட்டு இருக்கேன். இதுல காசு வருதோ இல்லையோ எங்க அப்பன் தாத்தன் இந்த மெஷினை தூக்கி வச்சு நடந்தது மாதிரியே நானும் நடக்கிறேன். அது எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கியயா என்று நெக்குருகிச் சொன்னார் பால்பாண்டி:

ஐயா இந்த உலகம் எங்கெங்கே போயிட்டு இருக்கு. நீங்க குலதொழில செஞ்சிட்டு இருக்கீங்க .இது தப்பு. முடி வெட்டுறவன் முடி வெட்டணும் .செருப்பு தைக்கிறவன். செருப்பு தைக்கணும் .கக்கூஸ் கழுவுறவன் கக்கூஸ் கழுவணும். அப்படி இருந்தா அதுக்கு பேரு தான்யா குலக்கல்வி அடிமைத்தனம்.

1980ல செஞ்ச வேலையை நாம இப்ப செய்யக்கூடாது .உலகம் நம்ம எப்படி கூட்டிக்கிட்டுப் போகுதோ அதுபடி தான் வாழ்க்கை நடத்தணும். சம்பந்தமில்லாம நம்ம வாழ்க்கைய நடத்தனும்னா தோத்து போயிடுவோம்.காணாம பாேயிருவாேம்.

நமக்கு இட்ட கட்டளை என்ன சொல்லுதோ அதுபடி தான் வாழ்க்கை நடத்தணும் பழைய விஷயத்தை பிடிச்சு தூக்கிட்டு இருந்தோம்னா நாம ஒரு காலமும் முன்னுக்கு வர முடியாதுய்யா

நீங்க தையல் தைக்கிற தொழில கேவலமா நினைக்கல. சாெல்லல. ஆனா .அது இப்ப யாரு விரும்பல பழசு, கிழிஞ்சத தைக்க தான் பயன்படுத்துறாங்க. இத வச்சு நீங்க எதுவும் சம்பாதிக்க முடியாது.பேருக்கு வேணும்னா இந்த தாெழில செய்யலாம்..முன்னேற முடியாதுய்யா. காலத்துக்கு தகுந்த மாதிரி தொழில மாத்துங்க. பாெழச்சிக்கிரலாம் என்று ஒருவர் சாெல்ல

நீங்க சாெல்றது சரிதான். இப்ப விட முடியாது. காெஞ்சம் காெஞ்சமா விட்டுர்றேன் என்று சாெல்லியபடியே

தெம்மாங்குப் பாடல் முதல் டப்பாங்குத்துப் பாடல் வரை ஒரு சேரப் பாடிக்காெண்டு தெருத்தெருவாக மிஷினைத் தூக்கிச் சென்றார், பால்பாண்டி

ஆனால் அவரிடம் தைப்பதற்கு துணி வரவில்லை. பால்பாண்டியின் பாடல் மட்டும் வந்து விழுந்து காெண்டிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *