செய்திகள்

தைப்பூச விழாவையொட்டி 57 ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்: ரெயில்வே அறிவிப்பு

Makkal Kural Official

சென்னை, நவ.18–-

இருமுடி, தைப்பூச விழாவையொட்டி 57 ரெயில்கள் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–-

இருமுடி மற்றும் தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 57 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தற்காலிகமாக ஒரு நிமிடம் நின்று செல்லும். அதன் விவரம் வருமாறு:-

* எழும்பூர் – -மதுரை வைகை எக்ஸ்பிரஸ், எழும்பூர் – -மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ், எழும்பூர் – -திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், எழும்பூர் – -செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ், எழும்பூர் – -கொல்லம் எக்ஸ்பிரஸ், தாம்பரம் – -ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், எழும்பூர் – -தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ், செங்கோட்டை – -தாம்பரம் எக்ஸ்பிரஸ், தாம்பரம் – -நாகர்கோவில் அந்தியோதியா எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி முதல் 31-ந் தேதி வரையில் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

இதேபோல் மதுரை- எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ், திருச்சி -எழும்பூர் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், செங்கோட்டை – எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ், கொல்லம் – -எழும்பூர் எக்ஸ்பிரஸ், ராமேசுவரம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ், காரைக்கால் – -தாம்பரம் எக்ஸ்பிரஸ், எழும்பூர் – -மன்னார்குடி எக்ஸ்பிரஸ், மன்னார்குடி – -எழும்பூர் எக்ஸ்பிரஸ், தஞ்சாவூர்- – எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ்,

செங்கோட்டை- – எழும்பூர் சிலம்பு எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் – -தாம்பரம் அந்தியோதியா எக்ஸ்பிரஸ், எழும்பூர்- – மதுரை எக்ஸ்பிரஸ், எழும்பூர் – -சேலம் எக்ஸ்பிரஸ் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற டிசம்பர் 14-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையில் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

எழும்பூர் – -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், மதுரை – -எழும்பூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் வருகிற டிசம்பர் 18-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையிலும், நாகர்கோவில் – -எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில், வருகிற டிசம்பர் 19-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையிலும், தாம்பரம் – -செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற டிசம்பர் 16-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையிலும் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

இதேபோல, கன்னியாகுமரி – -பனாரஸ் காசி தமிழ் எக்ஸ்பிரஸ் ரெயில், ராமேசுவரம் – -புவனேஷ்வர் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட 57 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *