செய்திகள்

தோனிக்கு ரூ. 12 லட்சம் அபராதம் !

மும்பை, ஏப். 11–

ஐபிஎல் டி20 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக முதல் ஆட்டத்தில், சிஎஸ்கே அணி, கேப்டன் தோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி.

டெல்லி அணிக்கு முதல்முறையாகக் கேப்டன் பொறுப்பு ஏற்ற இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தலைமைக்கு கிடைத்த முதல் வெற்றியாக அமைந்தது. இந்தப் போட்டியில் பந்துவீசுவதற்கு தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி அதிகமான நேரம் எடுத்துக்கொண்டதையடுத்து, கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ மும்பையில் ஏப்ரல் 10ம் தேதி நடந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை விட, கூடுதலாக பந்துவீச சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்துக்கொண்டது. இதையடுத்து, அந்த அணியின் கேப்டன் எம்எஸ் தோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *