சென்னை, ஏப். 10–
சென்னை குன்றத்தூரில் தேர்வு பயத்தில் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குன்றத்தூர், அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி. குன்றத்தூரில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகள் திவ்யதர்ஷினி (15), குன்றத்தூரில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இவரது பெற்றோர் காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்க்கு வந்து பார்த்தபோது திவ்யதர்ஷினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தற்கொலை செய்து கொண்டு இறந்து போன மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர் .முதல் கட்ட விசாரணையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து திவ்யதர்ஷினி பயந்து வந்ததாகவும் தொடர்ந்து பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுக்க நேரிடும் என பயந்து வந்ததாகவும் அதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளதாகவும் மேலும் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.