திருவண்ணாமலை, மார்ச் 15–
தேர்தல் விழிப்புணர்வை முன்னிட்டு, முள்படுக்கையில் 30 நிமிடங்கள் வரையில் படுத்து, இளம் பெண் சாதனை படைத்துள்ளார்.
தீபமாலை ஆன்மிகத் தொண்டு இயக்கத்தின் சார்பில் மகளிர் தினம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு 100 சதவிகித வாக்கு பதிவு, வனவிலங்கு பாதுகாப்பை வலியுறுத்தியும் ஆணி படிக்கையின் மீது சாந்தி ஆசனத்தில் 30 நிமிடம் படுத்தவாறு உலக சாதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
100 சதவிகித வாக்குப்பதிவு
திருவண்ணாமலை தீபமாலை ஆன்மீக தொண்டு இயக்கம் மற்றும் தீபமாலை மெடிக்கல் இன்ஸ்டியூட் ஆஃப் எலக்ட்ரோபதி மருத்துவமனை சார்பில் மகளிர் தினம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு, 100 சதவிகித வாக்குப்பதிவு, வனவிலங்கு பாதுகாப்பு வலியுறுத்தியும் யமுனா ஹரி கோவிந்தன், ஆணி படுக்கையின் மீது படுத்தவாறு சாந்தி ஆசனத்தில் 30 நிமிடம் உலக சாதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வனசாகர் சரவணன், மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை, யோகா பயிற்சியாளர் சுரேஷ்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர், திருவண்ணாமலை நீதி அரசர் கிருபாநிதி தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.