சிறுகதை

தேர்தல் – ராஜா செல்லமுத்து

தொழில் சார்ந்த ஒரு நிறுவனத்தில் முன்பு ஒரு அணியாக இருந்தவர்கள் எல்லாம் இப்போது வெவ்வேறு காரணங்களுக்காக வேறு பேரணியாக மாறினார்கள்.

ஒருவர் செய்ததை இன்னொருவர் குறை சொல்வது. இன்னொருவர் செய்ததை மற்றொருவர் குறை சொல்வது என்று ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லித் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார்கள் .

அவர் நிர்வாகத்தில் இருந்தபோதுதான் அந்தத் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்தது. அதை இன்னும் சரி செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார் ஒரு வேட்பாளர் .

அந்தத் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்தது. நாங்க வந்து தான் சரி செய்தோம் என்றார் இன்னொரு வேட்பாளர்.

தொழிலாளர் சங்க கட்டிடம் இருக்கும் இடத்தில் தினமும் குப்பைகளை போடுகிறார்கள்; அதை யாரும் எடுக்க சொல்வதே இல்லை; நாங்கள் வந்த பிறகுதான் குப்பைகளை அள்ளுவதற்கும் தினமும் அதை சேராமல் இருப்பதற்கு பஞ்சாயத்து ஆபீஸில் சொல்லி நாங்கள் தான் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்தோம் என்றார் ஒரு வேட்பாளர்.

குப்பைகளை போடுவதே அவர்கள்தான் என்று சொன்னார் இன்னொருவர்.

நாங்கள் வரும் வரை சங்க அலுவலக கட்டிடத்தில் யாரும் பீடி சிகரெட் தண்ணி அடிப்பது இல்லை. ஆனால் இவர்கள் சங்க அலுவலகத்தில் பீடி சிகரெட் குடிப்பது தண்ணி அடிப்பது மதுபான வகைகளை உதாரணமாக இருக்கிறார்கள்.

ஒரு வேட்பாளர் முதன் முதலாக மது பாட்டிலையும் புகையும் பயன்படுத்த ஆரம்பித்ததும் குற்றம்சாட்டுவார்கள் தான் என்றார்

இப்படி ஆளாளுக்கு ஆள் அடுக்கிக்கொண்டு பிரச்சினைகளை பேசி கொண்டிருந்தார்களே தவிர சங்கத்தின் உணர்ச்சிக்கும் தொழிலாளர்களின் வளர்ச்சிக்கும் யாரும் சொல்லவில்லை.

தேர்தலில் நிற்பவர்கள் பணக்காரர்களாக இருந்தார்கள். வாக்களிப்பவர்கள் மட்டும் தொழிலாளர்களாக இருந்தார்கள்.

எப்படியும் தொழிலாளர்கள் பகடைக் காய்களாக பயன்படுத்தப்பட்டு பணக்காரர்கள் தலைவராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.

விவரம் தெரியாத ஒரு தொழிலாளர் போட்டியிடும் வேட்பாளர்களைப் பற்றி கேட்டார்.

எனக்கு எதுவும் புரியல? இந்தத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருக்குறது னால என்ன கிடைக்கும்?ஏன் இப்படி போட்டி போடறாங்க என்று ஒரு வேட்பாளர் தொழிலாளரை கேட்டார்.

அதற்கு விவரம் தெரிந்த ஒரு தொழிலாளர் பதில் சொன்னார்:

எங்க போனாலும் இந்த தொழிற்சங்கத் தலைவர் அப்படி என்ற முத்திரையோடு உள்ள போகலாம் ; யாரையும் சந்திக்கலாம்; பேசலாம் .அது இல்லன்னா

கஷ்டம் ; அது மட்டும் இல்ல எப்பவுமே இந்த தொழிற்சங்கத்தோட இருக்கணும் அப்படிங்கிற ஒரு பெயர் இருக்கும் .

அவங்க வெளியே போனாலும் எதிலே ஒட்டிக்கொண்டிருக்கிறது. இவங்க அந்த சங்கத்தில் இருக்கிற மாதிரி ஒரு மாயையை உருவாக்கிருவாங்க. அதுக்குத்தான் இந்த தேர்தல் தலைவர் செயலாளர் பட்டமெல்லாம் என்றார் விவரம் தெரிந்த அந்த தொழிலார்.

அதுக்குத்தான் இவங்க இவ்வளவு ஆடுறாங்களா ?நான் கூட சேவை செய்வதற்கு தான்னு நினச்சேன் என்று கேள்வி கேட்ட தொழிலாளர் மலைத்து நின்றார் .

மறுபடியும் அந்த வேட்பாளர்கள் ஒருவருக்கு ஒருவர் குற்றம்சாட்டினார்கள்.

முன்பு அதை பார்த்து வியந்த தொழிலாளர்கள் இப்போது இவர்களின் நிலையை பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்.

தேர்தல் என்றால் அது இப்படித்தான் இருக்கும் என்று அவர்களுக்கு விளங்கியது.

Leave a Reply

Your email address will not be published.