டெல்லி, நவ. 06
‘தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், இந்தியா, அமெரிக்கா உறவுகள் வளரும்’ என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. டொனால்டு டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தற்போது நிலவரப்படி அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பது உறுதியாகி உள்ளது. அமெரிக்கா தேர்தல் குறித்து, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் கூறி இருப்பதாவது:–
உறவுகள் வளரும்
நீண்ட காலமாக, அமெரிக்காவுடனான எங்கள் உறவில் நிலையான முன்னேற்றம் இருந்துள்ளது. தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், இந்தியா, அமெரிக்கா உறவுகள் நீடித்து வளரும். அமெரிக்கத் தேர்தலைப் பார்க்கும்போது, தீர்ப்பு எதுவாக இருந்தாலும், எங்கள் உறவு தொடர்ந்து வளரும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். டிரம்ப் அதிபராக இருந்த போது, அமெரிக்காவுடனான உறவுகள் புத்துயிர் பெற்றது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.