செய்திகள்

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு மே–2 வரை தபால் ஓட்டு

சென்னை, ஏப்.1–

தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களிடமிருந்து தபால் வாக்குகள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2–ந்தேதி அன்று காலை 8 மணி வரை பெறப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, 80 வயது நிரம்பிய 92,559 முதியவர்களும், மாற்றுத்திறனாளிகள் 30,894 பேரும் தபால் வாக்களிக்க விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வீடுகளில் இருந்தபடியே ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். அவர்களிடமிருந்து ஏப்ரல் 5–ந்தேதி வரை தபால் வாக்குகள் பெறப்படும்.

இதேபோன்று தேர்தல் பணியில் ஈடுபட உள்ள காவல்துறையினர், அரசு அலுவலர்கள் ஆகியோரும் தபால் ஓட்டுகளை அளிப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவர்களும் வாக்களித்து வருகின்றனர். அவர்களிடமிருந்து தபால் வாக்குகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 2–ந்தேதி அன்று காலை 8 மணி வரை பெறப்படும்.

மொத்தம் 4.66 லட்சம் தபால் வாக்குகளில் இதுவரை 1.31 லட்சம் வாக்குகள் மட்டுமே பெறப்பட்டுள்ளன என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *