சென்னை, ஏப். 15–
நாடாளுமன்ற தேர்தல் நாளில் பணியாற்றுவோருக்கு ஊதியம் வழங்க ரூ.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற 19ம் நடைபெறவுள்ளது. தேர்தல் நாளன்று பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை அமைதியாகவும், சட்டம்- ஒழுங்கு பிரச்சினை இன்றியும் நடத்த வசதியாக 190 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர். மேலும், 10 கம்பெனி துணை ராணுவப் படையினரை அனுப்பி வைக்க வேண்டுமெனக் கோரி, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் அன்று பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.58.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 6 ஊழியர்கள் பணியில் ஈடுபடும் நிலையிம் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது. வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கு ரூ.1,700 முதல் கடைநிலை ஊழியர்களுக்கு ரூ.600 வரை ஊதியமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.