செய்திகள்

தேர்தல் செலவின கண்காணிப்பு குழுவினருடன் கடலூர் கலெக்டர் அன்புச்செல்வன் ஆலோசனை

கடலூர், மார்ச். 15–

கடலூர் மாவட்ட கலெக்­டர் அலுவலக கூட்டரங்கில் 17–வது நாடாளுமன்ற தேர்தல்–2019 தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து வங்கியாளர்கள் மற்றும் தேர்தல் செலவின கண்காணிப்பு குழுக்களுக்குடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்­டர் அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்­டடர் அன்புச்செல்வன் தெரிவித்ததாவது:–

கடலூர் மாவட்டத்தில் 17–வது நாடாளுமன்ற தேர்தல்–2019 நடைபெறவுள்ளதால் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் முறையாகவும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வங்கியாளர்கள் வங்கியில் நடைபெறும் பண பரிமாற்றத்தை மிக நுண்ணியமாக கண்காணித்திட வேண்டும். மேலும் தனிநபர் வங்கி கணக்கில் அதிகளவில் பணபரிமாற்றம் நடைபெறுகிறதா என்பதையும் கண்காணித்திட வேண்டும்.

வேட்பாளர்களின் கணக்குகளை தேர்தல் செலவின கண்காணிப்பு குழு அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். இப்பணிகள் யாவும் வங்கியாளர்கள் மற்றும் தேர்தல் செலவின கணக்கு குழுவினர்கள் வெளிப்படையாக வும், நேர்மையாகவும் தங்கள் பணிகளை செய்திட வேண்டும். தேர்தல் தொடர்பான விவரங்களை கண்காணித்து தேர்தல் நடைபெறுவதற்கு அனைத்து ஒத்துழைப்பையும் அளிக்க வேண்டும்.

இவ்­வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சந்தோஷினி சந்திரா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆனந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) விநாயகம்பிள்ளை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜோதிமணி, தேர்தல் வட்டாட்சியர் பாலமுருகன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *