பெங்களூரு, டிச. 16–
தேனீக்கள் தாக்குதலில் இருந்து தப்பிக்க கடலில் குதித்த மீனவர் உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலம் உடுப்பு மாவட்டம் நடிபட்னா பகுதியை சேர்ந்த மீனவர் வாசுதேவ் சலியன் (வயது 65). இவர் நேற்று கடலுக்கு அருகே நின்று வலைவீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரை சூழ்ந்துகொண்ட தேனீக்கள் அவரை கொட்டியது. இதனால், அதிர்ச்சியடைந்த வாசுதேவ் கடல் நோக்கி ஓடி கடலில் குதித்தார். கடலில் குதித்த வாசுதேவை அலைகள் இழுத்துச்சென்றன. இதில் அவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.