செய்திகள்

தேனி மாவட்ட தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் விதிமுறைகளை பின்பற்ற கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவு

தேனி, ஜூலை.4–

தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி, சுற்றுச்சூழல் விதிமுறைகளை பின்பற்றிட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளதாவது:–

தேசிய பசுமை தீர்ப்பாயம் ஊரடங்கு நாட்களில் ஆற்று நீரின் தரம் மேம்பட்டுள்ளது என தொிவித்ததோடு அதற்கான காரணங்களை மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் பகுப்பாய்வு செய்து அதன் அறிக்கையினை தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்திடவும், தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டால், சுற்றுச்சூழல் தரநிலைகளை தொழிற்சாலைகள் முழுமையாகக் கடைப்பிடிக்க அதிகாரிகளால் உறுதி செய்திடவும் உத்தரவிட்டுள்ளது.

எனவே பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தொழிற்சாலைகளும் சுற்றுச்சூழல் விதிமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *