வாழ்வியல்

தேனி கோடங்கிபட்டி சித்திர புத்திர நாயனார் கோவில்

*வேண்டி வழிபட்டால் ஆயுள் தீர்க்கம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை

சித்திர புத்திர நாயனார் கோவில், கோடங்கிபட்டி, தேனி மாவட்டம்

வேலைப்பளு அதிகம் ஆனால் மனஅழுத்தம் அதிகமாகும். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல; இறைவனுக்கும் உரியதாகும்.

எனவே தான் தனது படைப்புகளின் கணக்குகளை சரிபார்ப்பதற்கும் ஒரு தனி பிரிவு தேவை என்பதை உணர்ந்து, சிவபெருமான், பார்வதி தேவியிடம் இதுபற்றி ஆலோசனை கேட்டார். அவர் ஒரு சித்திரம் வரைந்து தர அதற்கு இருவரும் இணைந்து உயிர் ஊட்டியதால் உதித்தவரே சித்திரபுத்திரர். சிவபெருமானின் படைப்புகளின் கால கணிதங்களை இவரே நிர்வகிக்கிறார் என்பது புராண வரலாறு. சித்திரம் என்றால் படம் என்றும் மற்றொரு பொருள் “ஆச்சரியமானது” என்பதும் குப்தம் என்றால் “ரகசியம்” என்று பொருள் ஆகும். சித்திரகுப்தர் கணக்கெழுதும் முறை மிகவும் ரகசியமானது என்பது உண்மை ஆகும்.

தமிழகத்தில் தெற்கில் உள்ள தேனி மாவட்டத்தில் கோடங்கிபட்டி என்ற கிராமத்தில் சித்திரகுப்தருக்கு ஒரு கோவில் உள்ளது. காஞ்சிபுரத்திற்கு அடுத்து இங்கு மட்டுமே இவருக்கு இங்கு கோவில் உள்ளது.

நவகிரகங்களில் கேதுவுக்கு சித்திர குப்தனே அதிபதி, எனவே கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டோர், இத்தலம் வந்து இவரை வழிபட தோஷம் நீங்கும் என்பதுவும் பெண்கள் சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்து உப்பு சேர்க்காத உணவு உண்டு வேண்டிக் கொண்டால் ஆயுள் தீர்க்கம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை வேண்டுதல் நிறைவேறியவர்கள் சுவாமிக்கு வஸ்தரம் சாத்தி பூஜைகள் செய்து நிறைவேற்றிலை முடிக்கின்றனர்.

மூலவராக சித்திரபுத்திர நாயனார் அமைந்து உள்ளார். இவரது துணைவியார் பிரபாவதிக்கு தனி சன்னதி உண்டு.

இத்தலம் சுமார் 1000 வருடங்கள் பழமையானது. இங்கு சித்ரா பௌர்ணமி சிறப்பான விழாவாக உள்ளது. தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் திறந்து உள்ளது.

சித்திர புத்திர நாயனார்

திருக்கோவில் கோடாங்கிபட்டி

தேனி மாவட்டம் – 625 547

தொலைபேசி : 99944 98109, 94865 76529

மாது சேர் மார்பன் முன்னர் வானவர்க்கு அமுதம் நல்கும்

போது நீ அவரினூடே போந்ததால் சிரமிழந்து

தீதிலாக் கதிர் விளங்கச் சிவன் தர அதனைப் பெற்ற

கேதுவே உனைத் துதித்தேன் கிருபையாய் ரட்சிப்பாயே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *