வாழ்வியல்

தேனில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்!

தேனை விரும்பாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். உண்மையில், கெட்டுப்போகாத ஒரே பொருள் தேன் மட்டும் தான். பூச்சிகளால் தயாரிக்கப்பட்டு மனிதர்கள் உட்கொள்ள கூடிய ஒன்று தேன் தான். தினமும் தேன் பருகினால் முன்பை விட உற்சாகமாக இருப்பதை உணர்வீர்கள்.

உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் தினமும் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடலாம். தேன் சீரான சக்தியை தரும், இரைப்பையில் ஏற்படும் எல்லா விதமான நோய்களும் குணமாகும், நெஞ்சில் ஏற்படும் இரைச்சல், குடலில் இருக்கும் புண்களை ஆற்றும். இரத்த சோகையை போக்கும்.

நரம்புகளுக்கு வலிமையை தரும். தோல் சம்பந்தமான நோய்களை போக்கும், இரத்தத்தை சுத்தப்படுத்தும் கிருமி நாசினியாக வேலை செய்யும். பற்கள் மற்றும் கண்களுக்கு பலன் தரும்.தொண்டையில் ஏற்படும் வலியை குறைக்கும். பொதுவாக தேனை குறைந்த அளவு அருந்தினால் மலச்சிக்கலை போக்கும். அதிக அளவு அருந்தினால் மலச்சிக்கலை உண்டு பண்ணும்.தேனை சுடுநீரில் போட்டு கலக்கி குடித்தால் குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாக மாறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

உடல் மெலிந்தவர்கள் தினமும் பாலுடன் கலந்து தேன் சாப்பிட்டால் தேவையான உடல் பருமனை பெறுவீர்கள். அடிக்கடி சளி பிடிக்கும் நபர்கள் இளம் சூடான பாலில் சிறிது தேன் மற்றும் மஞ்சள் தூள் கலந்து சாப்பிட்டால், சளி விரைவில் குணமாகும். அசல் தேனை எப்படி கண்டுபிடிப்பது, ஒரு கண்ணாடி டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் தேனை விட்டால் அது அடியில் தங்கினால் அது அசல் உண்மையான தேன் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *