சிறுகதை

தேடி வந்த தெய்வம் | கரூர்.அ.செல்வராஜ்

தபால்காரர் கொடுத்து விட்டுச் சென்ற கவரை வாங்கி பத்திரமாக வைத்து விட்டு வீட்டு வேலைகளை தொடர்ந்தாள் மல்லிகா. கடைக்குச் சென்றிருந்த ஜெயசுதா வீட்டுக்குத் திரும்பி வந்தாள்.

மகளைக் கண்ட மல்லிகா தான் வாங்கி வைத்திருந்த கவரை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். கவரைப் பிரித்துப் படித்துப் பார்த்த ஜெயசுதா மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள். அதே சந்தோஷத்தோடு தன் அம்மாவிடம் பேசினாள்.

” அம்மா!”

” சொல்லுமா ஜெயா “

” டாக்டர் படிப்பு படிக்க எனக்கு இடம் கிடைச்சிருக்கு. வர்ற வெள்ளிக்கிழமை காலையில் சென்னையிலேயே இருக்கணும்” என்றாள்.

மகளின் சந்தோஷம் தனக்கும் உண்டு என்றாலும் டாக்டர் படிப்பு படிக்க வைக்க தன்னால் முடியாதே என்ற கவலையை மனதுக்குள் வைத்து மறைத்துக் கொண்டாள் மல்லிகா. மனக்கவலையை வெளியில் காட்டாமல் சமாளித்து வாழும் மக்களிடம் பேசினார்.

” ஜெயா!’

” சொல்லுங்கம்மா “

” டாக்டர் படிப்பு படிக்க உனக்கு ஒரு இடம் கிடைச்சது. எனக்கு சந்தோஷம். நானும் உங்க அப்பாவும் கட்டிட வேலை செய்கிறோம் . எங்க வருமானத்துல உன்னை டாக்டர் படிப்பு படிக்க வைக்கிறது சிரமம். இருந்தாலும் உன் படிப்பு செலவுக்கு உதவி செய்ய சொல்லி உன் தாய்மாமா தனசேகரனைக் கேட்க போறேன் ” என்றாள் மல்லிகா.

மகளுக்கு வந்திருந்த கடிதத்தை கையில் வாங்கிய மல்லிகாவின் கணவன் முத்துசாமி தன்னுடன் மனைவியையும் மகளையும் அழைத்துக்கொண்டு கிளம்பி தனசேகர் வீட்டுக்கு சென்றார். அவரிடம் கடிதத்தைக் கொடுத்தார்.

அண்ணன் தனசேகர் என்னிடம் தங்கை பேசினாள்.

” அண்ணே! என் மகளுக்கு டாக்டர் படிப்புக்கு இடம் கிடைச்சிருக்கு.

வர வெள்ளிக்கிழமை மெட்ராசுக்கு போகணும். இடம் கிடைச்ச காலேஜுக்கு பணம் கட்டணும். ஆரம்ப செலவுகள் குறைந்தது ஒரு லட்சம் தேவைப்படும். நீங்கதான் உதவி செய்யணும் ” என்றாள்.

தன் மகனுக்கு கடந்த வருஷத்தில் டாக்டர் படிப்பு படிக்க இடம் கிடைக்காமல் என்ஜினீயரிங் படிப்பு படிக்க வைத்துக் கொண்டிருக்கும் தனசேகர் தன் மன வருத்தத்தை தங்கள் மல்லிகாவிடம் காட்டும் வகையில் பேச ஆரம்பித்தார்.

” மல்லிகா! எங்கிட்ட பணம் இருக்குது. ஆனா, என் மகனால் டாக்டர் படிப்பு படிக்க முடியல. உன்கிட்ட பணம் இல்லை, ஆனா என் மகளுக்கு டாக்டர் படிப்புக்கு இடம் கிடைச்சிருக்கு. என்னாலே உன் மகளின் படிப்புக்கு பண உதவி செய்ய முடியாது” என்றார்.

பண உதவி செய்ய மனமில்லாத அண்ணனிடம் இனி என்ன பேசினாலும் பயன் இல்லை என்பதை அறிந்து கொண்ட மல்லிகா தன் வீட்டுக்கு திரும்பிச் சென்றார். அரை மணி நேரத்திற்குப் பிறகு மல்லிகாவின் மகள் ஜெயசுதாவை தேடி அவளது வகுப்பு ஆசிரியை ஜான்சி ராணி வந்தார். அவரிடம் நடந்த விஷயங்களை சொல்லி அழுதாள் மல்லிகா. அதைக் கேட்டதும் கண் கலங்கிய ஆசிரியை ஜான்சிராணி தனது மாணவி ஜெயசுதாவின் டாக்டர் படிப்புக்குரிய ஆரம்பநிலை செலவுக்காக பண உதவி செய்வதாக உறுதியளித்தார். அதைக் கேட்ட மல்லிகா தன் மகளின் ஆசிரியர் ஜான்சிராணிக்கு நன்றி கூறியதுடன் அவரைத் ” தேடி வந்த தெய்வம் நீங்கதான்” என்று பாராட்டி கையெடுத்துக் கும்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *