சென்னை, ஆக. 2–
சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரெயில் இனி தாம்பரம் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தேஜஸ் விரைவு ரெயில் முன்னதாக ஆகஸ்ட் 26–ந்தேதி வரை மட்டுமே தாம்பரத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய ரெயில் தாம்பரத்தில் நிரந்தரமாக நின்று செல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தேஜஸ் விரைவு ரெயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.