இயக்குநர் சுமன் குமாரின் வெற்றி துவக்கம்
… ரகு தாத்தா சிரிக்க, சிந்திக்க
ஆர். முத்துக்குமார்
கீர்த்தி பெரிது, ஆனால் கீர்த்தி சுரேஷோ மகா பெரிய நடிகை என்பதை அவரது படங்கள் பேசுகிறது. மகாநதி அவருக்கு தேசிய விருதை 2019–ல் பெற்று கொடுத்ததை திரைப்பட ரசிகர்கள் மறக்கவா முடியும்!
இம்முறை பெண்ணீயம் பேச இந்த நடிப்பு போதுமா? என அவர் தேர்ந்தெடுத்த இயக்குநர் சுமன் குமாருக்கு தந்து இருக்கும் படைப்பு எடிடிங் கட்டத்தில் எதை எடுப்பது, எதை எப்படி தொடுப்பது சரியான கதம்பமாய் ரசிகர்களுக்கு மாலையை உருவாக்குவது? என்ற நிலையில் எந்த தடுமாற்றமும் இன்றி என் படம் ரசிகர்களுக்கு இப்படிப்பட்ட விருந்தாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையோட்டத்தின் வெளிபாடு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.
படத்தின் கேமரா பெண்மணி யாமினி இப்படக் குழுவின் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரம் அவரது முந்தைய படைப்பு சானி காகிதத்தில் அடி தடி வெட்டு குத்து களத்தில் பரபரப்பான காட்சி நகர்தலில் பக்கபலமாக இருந்தவர்.
இம்முறை பெண்ணியம் பேசும் கீர்த்தி சுரேஷ் மற்றும் திவ்ய தர்ஷினியின் இணையாக உடன் செயல்பட்டு மிக தத்ரூபமாக நம்மை 1970களுக்கு கை பிடித்து இழுத்துச் செல்கிறார்.
இந்தி எதிர்ப்பு சம்பவங்களுக்குப் பிறகு வங்கிகள் தேசியமயமாக அறிவிக்கப்பட்ட சில மாதங்களில் நடைபெறும் சம்பவங்களின் பின்னணியை சுமன் குமார் களமாக அமைத்து இப்படி ஒரு பொழுதுபோக்கு சினிமாவை உருவாக்கி இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ்சை ஏன் உமன் ராணுவ வீரராய் ஏற்றதை கூட ஒரு சில வினாடிகள் வரும் அந்த ராணுவ மிடுக்கு சீன் சாட்சி!
காட்சிகள் மாறும் கீர்த்தி சுரேஷ் தனது முத்திரையை அழுத்தம் திருத்தமாய் ஒவ்வொரு பிரேமிலும் பதிவு செய்து இருக்கும் நிலையை உருவாக்கி இருப்பதில் கதை இலாக்காவிற்கு மனம் திறந்த பாராட்டுக்களை சொல்லியே ஆக வேண்டும்.
ரகு தாத்தா என்ற உடன் பாக்கியராஜ் நடித்து இயக்கிய “இன்று போய் நானை வா” என்ற 80களின் பிற்பகுதியில் சென்னை பைலட் தியேட்டரில் சக்கை போடு போட்ட படத்தை நினைவுபடுத்தும்!
அதில் பாக்கிராஜூம் நண்பர்களும் கதாநாயகி ராதிகாவை வலைவீசி காதலில் வீழ்த்த அவரது வீட்டில் ஒருவர் குத்து சண்டை கற்றுக் கொள்ள நுழைவார், இன்னொருவரோ இந்தி பயில செல்வார், இந்தி சொல்லிக் கொடுக்கும் இந்தி ஆசான் ராதிகாவின் தந்தை
“ஏக் காவுமேயின் ஏக் கிசான் ரகஹதா தா”தமிழில் சரிவராது. ஆங்கிலத்தில் ஓர் அளவு சரியாக வரும் என்று நம்புகிறேன்!
அந்த டயலாக் “Ek gaav mein ek Kisaan Rahata tha”
அதாவது ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தான் என பாடம் எடுக்க பயில வந்தவர் அதை ரகு தாத்தா என வீம்புக்கு கண்டபடி மீண்டும் மீண்டும் சொல், ஆசான் அவரை ‘கொட்டோ கொட்டு என மண்டையிலே கொட்ட, இதை பார்த்துக் கொண்டு இருக்கும் ராதிகாவும் அவரது சகோதரியாக வரும் கேரக்டரும் ‘அய்யோ பாவம்’ என விழுந்து விழுந்து சிரித்தபடி பாவமாய் பார்த்துக் கொண்டிருக்க அப்படத்தை பார்க்க வந்தவர்கள் வயிறு வலிக்க சிரித்த தருணம் பார்த்தவர் யாருக்கும் மறந்து இருக்கவே முடியாது!
அதில் இருந்த அந்த ‘ரகு தாத்தா’ என்ற சொற்தொடர் எங்களுக்கு ”இந்தி தெரியாது போடா ” என கூற ஏதுவான ஒரு தமிழ் சொற்தொடர் என்பது தான் உண்மை.
அந்த வாசகத்தை டைடில்லாக வைத்து பின்னியிருக்கும் வரலாறு, காதல், இயற்கை, நையாண்டி, நாயகன், அவனே வில்லன்னா? என்ற மர்மம் அல்லது அவரது அம்மா தான் வில்லியா? அட முதல் காட்சியில் வந்த இந்தி பிரியரும் இசை வளர்ப்புக்காக இப்படி அப்படி செய்து இருப்பாரா? அல்லது கதாநாயகியே தனது கொள்கையை மரண படுக்கையில் திண்டாடிக் கொண்டிருக்கும் ரகு தாத்தாவிற்காக மீண்டும் மாறி விட்டாரா?
இப்படிப்பட்ட பல சம்பவங்களை ஒருங்கே ஒரு கதையாய், எளிய வசனங்களுடன், மனதை வருடும் இசையுடன், புரியும் படியான பாடல் வரிகளுடன் ஒருவித கிளாசிக் திரைகாவியத்தை நமக்கு விருந்தாய் படைத்து இருக்கிறார் சுமன் குமார் என்பது மிகையில்லை.
அவரது பேமிலிமேன் வெப்தொடரின் கதையாசிரியர் என்ற ஒரு போர்வையில் தனது ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தி இருந்தார்.
அது மிகப்பெரிய வெற்றியை தேசிய அளவில் போற்றப்பட்டது, சர்வதேச ரசிகர்களையும் ஈர்த்து இழுத்தது. அதை தொடர்ந்து தில்குயிர் சல்மானை முன்நிறுத்தி உருவான கன்ஸ் ஆன்ட் குலாப் (Guns and Gulab) சீரியலின் இணை கதாசிரியருமாக அடையாளம் காணப்பட்ட சுமன் குமார் கதைகளை மர்மம் நிறைந்த பாணியில் நையாணெ்டி தனம் கொண்ட நகைச்சுவையுடன் தரும் அனுபவசாலி.
அவரது முதல் இயக்குனர் முகமே ‘ரகு தாத்தா’ 1970களில் இயக்குனர்களில் உச்சத்தை தொட்ட பாலசந்தர், பாரதிராஜா, பாக்கியராஜ், எஸ்பி முத்துராமன் கொண்ட பட்டியலில் இருந்தவர்கள் எடுத்த ஆக்ஷன் குடும்ப காவியங்களின் அம்சங்கள் பல இடங்களில் ‘பளிச் பளிச்’ என மின்னல் வேகத்தில் நமக்கு பரவசம் தரும் திரை காவியத்தை உருவாக்கி இருக்கிறார்.
இப்படத்தை இந்தி எதிர்ப்பு என்பதால் நமது நாட்டின் இந்தி எல்லைபுறத்தில் வரவேற்பு இருக்குமா?
உண்மையில் அந்த கோணம் ஒரு சிறு அம்சம் என்பதை மறந்து விடக்கூடாது.
படம் பார்க்கும் போது ஏற்படும் திருப்பங்கள் பாக்கியராஜின் திரைக்கதை பாணியை நினைவுபடுத்தும். இதுதான் என நம்மை நம்ப வைத்துக் கொண்டு இருக்கையில், வரும் ஓர் மொட்டை கடுதாசி பற்றி சொல்கிறேன்.
மொட்டை கடுதாசிதான் இத்திரைப்படத்தின் மர்மங்களின் உச்சம், அதை எழுதியவர் யார் என்று கூட வசனம் கிடையாது, அந்த கேரக்டர் செய்யும் சேட்டை தன்னை அடையாளம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக போட்டு கொண்டிருக்கும் தலைபாகையை அவிழ்த்து விட்டு ‘ரஜினி– கமல்– ஜெய்சங்கர்’யிசங்கள் கொண்ட கதாநாயகன் ரவீந்தரா விஜய் முன் மொட்டை தலையை காட்டியபடி காட்சியை விட்டு வெளியேற, நம்மில் பலருக்கு ஏன், எதற்கு என சிந்தனை ஓட்டம் தொடர கூட கன நேரம் கடக்கும் முன் அடுத்த காட்சியில் மனம் ஈடுபட வேண்டிய கட்டாயம்!
கிட்டத்தட்ட 24 மணி நேரத்திற்குப் பிறகு இதை எழுதும் நேரத்தில் என் முகத்தில் மலரும் சிரிப்பு, இந்த படத்தை மீண்டும் பார்த்தாக வேண்டும் என இழுக்கிறது, அதுவே இப்படத்தின் வெற்றி.
இசை சீன் ரோல் தான், தான் ஓர் இசை சக்கரவர்த்தி என சீன் போடாமல் இந்த படத்திற்கு இது .ேவை என உணர்ந்து இசைத்து இருக்கிறார்.
”நிறம் மாறாத பூக்கள்” என்ற பாரதிராஜா, இளையராஜா கூட்டணியின் திரை காவியத்தில் வரும் ஆயிரம் மலர்களே மலருங்கள், என்ற பாட்டில் அந்த கால கட்ட ரசிகர்களால் மறக்க முடியாத பாடல், அதில் வரும் வார்த்தைகள், வசிய மருந்தாக இழைந்தோடும் இசை, அதன் சாயலை இப்படத்தில் சீனுக்கு சீன் இசைத்து படத்தில் ஒன்றி இருக்கிறார் சீன்ரோல் தான், நம்மையும் வசீகரிக்கிறார்.
மொத்தத்தில் ‘இன்று போய் நாளை வா’ ரசிகர்களுக்கு மீண்டும் இன்று ‘ரகு தாத்தா’!நல்ல நடிப்பிற்கு மீண்டும் தேசிய விருதுக்கான முயற்சி கீர்த்தி சுரேஷிடம் இருக்கிறது, அடுத்த தலைமுறை பல விருந்துகள் தர சுமன் குமார் மிகப்பெரிய எதிர்பார்ப்பு!
#Raghu Thatha #Movie Review #Keerthi Suresh #Yamini Yagnamurthy #Sumankumar