செய்திகள்

தேசிய அளவில் 3 விருதுகளைப் பெற்றது “வினிஷா விஷன்”

சென்னை, ஏப். 21–
‘‘அட்வர்ட்டைசிங் கிளப் மெட்ராஸ்’’ நடத்தும் தென்னிந்திய அளவிலான விளம்பரத் துறையின் கிரியேட்டிவ் விருது வழங்கும் ‘மேடீஸ்’ (MADDYS) விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் 300–க்கும் மேற்பட்ட படைப்புகளோடு பல நிறுவனங்கள் போட்டியிட்டன. சென்னையிலுள்ள முன்னணி விளம்பர நிறுவனமான வினிஷா விஷன் நிறுவனம், மேடீஸ் 2019 சிறந்த படைப்புகளுக்கான 3 விருதுகளைப் பெற்றுள்ளது.
இது குறித்து வினிஷா விஷன் விளம்பர நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே.வி.கதிரவன் நிருபர்களிடம் கூறியதாவது:–
“எங்களுடைய வினிஷா விஷன் விளம்பர நிறுவனம்’’ கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேல் விளம்பரத் துறையில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. வெற்றிக்கு உக்தியாக இருக்கும் விளம்பரங்களை மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு வித்தியாசமான வடிவத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம்.
விளம்பர உற்பத்தி பொருள் எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பது அவர்களுடைய கனவு, ஆனால் அந்த பொருளை எப்படி எடுத்துச் செல்லலாம், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து செயல்படுவது தான் வினிஷா விஷன். எங்களைப் பொறுத்தவரையில் உற்பத்தி பொருள் என்ன? அதன் பிராண்ட் வால்யூ என்ன? அதை எந்த மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும், பயன்படுத்தக் கூடிய மக்களின் பார்வையிலிருந்து சிந்தித்து அதற்கு தகுந்தாற்போல், ஏற்கனவே சந்தையில் பல்வேறு பிராண்ட்–ல் உள்ள அதே பொருளின் நிறைகுறைகளை ஆராய்வோம். பின்னர் பொருளின் சந்தை நிலவரம் மற்றும் ஏற்கனவே உள்ள பொருளை ஒப்பீடு செய்து கலந்தாலோசித்து வாடிக்கையாளர்களின் தினசரி அலுவல்களோடு தொடர்புள்ள வகையில் விளம்பரத்தை தயாரிப்போம். இது போன்ற எங்களின் தன் முனைப்பான உழைப்பினால் எங்களுடைய விளம்பரதாரர் நிறுவனத்தின் வியாபார வளர்ச்சி வருடத்திற்கு 20 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை இரட்டிப்பாகிறது.
புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, மிக முக்கியமாக மக்களுக்கு எளிதில் புரியும் விதமாகவும், மக்களை ஈர்க்கும் விதமாகவும் கிரியேட்டிவ் டிசைன் மற்றும் ஐடியா தயார் செய்து வெளியிடுகிறோம். இதுபோன்று மிகவும் திட்டமிட்டு செயல்படுவதால் தான் நாங்கள் வருடம் தவறாமல் விருதுகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த வருடம் மேடீஸ் 2019 விழாவில் பொன்வண்டு சோப்பு விளம்பரத்திற்கு கிரியேடிவ் சினிமா அவார்டு
உதயம் பருப்பு – பாஸ்போர்ட் இல்லாம பாரீனா எனும் ரேடியோ விளம்பரத்திற்கு பெஸ்ட் கிரியேடிவ் சினிமா அவார்டு சௌக்கியா இளநீருக்கு பாக்கேஜி்ங் அவார்டு பெற்றுள்ளோம்.
குருமஹாத்ரியா-வின் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் எங்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக உள்ளது.
இவ்வாறு கதிரவன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *