செய்திகள்

தேசிய அளவில் வில்வித்தை: ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவி தன்யா முதலிடம்

கோவை, டிச. 6–

தேசிய அளவிலான வில்வித்தை போட்டியானது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள கரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் துறை முதலாம் ஆண்டு மாணவி தன்ய துர்கா 30 மீட்டர் தூர பிரிவில் முதலிடம் பிடித்தார்.

வெற்றி பெற்ற மாணவியை எஸ்என்ஆர் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசாமி, அறக்கட்டளையின் கல்வி இயக்குனர் எபினேசர் ஜெயக்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சிவக்குமார், உடற்கல்வி இயக்குனர் சண்முகவேல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *