செய்திகள்

தெலுங்கானாவில் காங்கிரசுக்கு ஆதரவு: தி.மு.க. அறிவிப்பு

சென்னை, நவ. 21–

தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு, தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது.

தெலுங்கானா மாநில சட்டசபைக்கு வருகிற 30ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் “வருகிற 2023 நவம்பர் 30 அன்று தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டுமெனவும், தெலுங்கானா மாநிலக் கழக அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தேர்தல் பணிக்குழு அமைத்து, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தல் பணியாற்றி, அக்கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *