செய்திகள்

தெலுங்கானாவில் இருந்து தமிழகத்திற்கு சரக்கு ரெயிலில் வந்த 2,620 டன் அரிசி

விழுப்புரம், ஏப்.13-

இந்திய உணவுக்கழகம் மூலம் கொரோனா நிவாரணத்துக்காக தெலுங்கானாவில் இருந்து தமிழகத்துக்கு 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயிலில் 2,620 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளியில் இருந்து புறப்பட்ட இந்த சரக்கு ரெயில் சின்னசேலம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு சரக்கு ரெயிலில் இருந்த 52 ஆயிரத்து 705 மூட்டை புழுங்கல் அரிசியை லாரிகளில் ஏற்றி கொரோனா நிவாரண திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக கடலூர், விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பணியை சின்னசேலம் சேமிப்பு கிடங்கு மேலாளர் பழனியப்பன், இந்திய உணவுக் கழக மேலாளர் வெங்கடாசலம், ரெயில் நிலைய மேலாளர் செல்வராஜ், ஒப்பந்தக்காரர் தியாகராஜன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதையொட்டி அங்கு ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். சின்னசேலம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ராஜா தலைமையிலான ஊழியர்கள் லாரிகள் மற்றும் ரெயில் பெட்டிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *