வாழ்வியல்

தெற்கு அட்லான்டிக் பெருங்கடலில் பனிப்பாறை உடைவதால் உயிரினங்களுக்குத் தொடரும் ஆபத்து

தெற்கு அட்லான்டிக் பெருங்கடலில் மிதந்து பயணித்துக் கொண்டிருக்கும் A68a என்கிற பிரம்மாண்ட பனிப்பாறையில், சில பெரிய விரிசல்கள் ஏற்பட்டு உடைந்திருப்பதாகத் தோன்றுகிறது.

கடந்த டிசம்பர் 22, செவ்வாய்க்கிழமை வெளியான செயற்கைக் கோள் படத்தில், A68a என்கிற பிரம்மாண்ட பனிப்பாறையின் மீது பெரிய பிளவுகள் ஏற்பட்டிருப்பதைக் காண முடிகிறது.

A68a பனிப்பாறையில் இருந்து விரல் வடிவில் தோற்றமளிக்கும் பனிப்பாறை பிளவு உடைபட்ட சிறு பனிப்பாறைகள் ஒன்றுக்கொன்று விலகிச் செல்வதையும் பார்க்க முடிகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு அன்டார்டிகாவில் இருந்து பிரிந்து வந்தது தான் இந்த A68a பனிப்பாறை. இது தெற்கு ஜோர்ஜா தீவின் கடற்கரை ஓரத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.

இந்தப் பெரிய பனிப்பாறை, ஆழம் குறைவாக உள்ள பகுதிகளில் தங்கிவிடுமோ என நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

இந்த பனிப்பாறை, பிரிட்டிஷ் ஓவர்சீஸ் டெரிட்டரி கடற்கரை பகுதி வரை சறுக்கிக் கொண்டு வருவதற்கான, சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. எனவே அங்கிருக்கும் பென்குயின்கள் மற்றும் கடல் சிங்கங்களின் உணவு தேடலில் பிரச்சனைகள் எழும். A68a பனிப்பாறை தான், இதுவரை காணப்பட்ட பனிப்பாறைகளிலேயே நான்காவது மிகப் பெரியது. அப்படிப்பட்ட பனிப்பாறை, சுமாராக மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு சிதையத் தொடங்கி இருக்கிறது என்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தின் அட்ரியன் லக்மென்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *