சிறுகதை

தெரியாமல் போச்சே – சேலையூர் சந்தானம்

ஜமுனாவும் ஜானகியும் ஒரே பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து நெருக்கமான தோழியர்கள் ஆனார்கள். பிறகு ஒரே கல்லூரியில் வெவ்வேறு துறைகளைத் தேர்ந்தெடுத்துச் சேர்ந்தனர். இவர்களை இவரது கல்லூரித் தோழிகள் ஜோடி வளையல் என்று அழைத்தனர். இதன் பின் ஆசிரியர் பயிற்சியை முடித்து ஒரே பள்ளியில் பணியில் சேர்ந்தனர். இருவரும் தங்களது அயராத உழைப்பை வெளிப்படுத்தி மாணவ மாணவியரின் அறிவுத்திறனை மேம்படுத்தி பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தினர். சக ஆசிரியர்கள் மற்றுமின்றி தலைமையாசிரியரும் இவர்களைப் பாராட்டினார்கள். ஜானகியின் கூச்ச சுபாவத்தினால் அவளால் ஜமுனாவைப் போன்று தைரியமாக முன் செல்ல இயலவில்லை.

தலைமையாசிரியர் முக்கியமான விஷயங்கள் பற்றி ஆலோசனை நடத்தும்போது ஜமுனாவை அழைக்கத் தவறுவதில்லை. பள்ளிகள் இடையே நடக்கும் போட்டிகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் பொறுப்பை தலைமையாசிரியர் ஜானகியை நியமித்தார்.

ஜானகியும் நல்ல முறையில் மாணவர்களை தயார் செய்து நிறைய விருதுகள் பள்ளிக்கு கிடைக்கும்படி செய்தார். என்னதான் திறம்பட செய்தாலும் ஜானகிக்கு தலைமையாசிரியர் அழைத்தால் ஒரு வித பதைபதைப்போடு தான் செல்வார். ஜமுனா எவ்வளவு சொல்லியும் ஜானகியின் பயத்தைப் போக்க இயலவில்லை.

ஜமுனா மற்றும் ஜானகிக்கு உள்ளுரிலேயே அரசாங்க பணியில் இருக்கும் பாலு மற்றும் கோபுவை நிச்சயம் செய்து ஜமுனாவிற்கு பாலுவும். ஜானகிக்கு கோபுவும் திருமண பந்தம் ஏற்படுத்தினர் அவர்கள் பெற்றோர்கள். ஜமுனாவைப் பற்றி முன்பே அறிந்திருந்த பாலு அவளுடன் இணக்கமாக செல்வதென முடிவெடுத்து அதை நடைமுறைப்படுத்தினார். இதனால் இருவருக்குள்ளும் தம்பதி ஒற்றுமை மேலோங்கியது.

ஜானகியின் பயத்தைப் பயன்படுத்திய கோபு தான் சொல்வதைத்தான் கேட்க வேண்டுமென தனது மனைவியிடம் அதிகாரம் செய்தான். ஜானகி ஜமுனாவிடம் இதைப் பற்றிச் சொல்ல அவர் நீ உனது கௌரவத்தை விட்டுக் கொடுக்காதே என்றார். என்னதான் சொன்னாலும் கோபுவின் முன் பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போவார் ஜானகி.

விடுமுறை நாட்களில் ஜமுனா மற்றும் பாலு ஜானகி இல்லம் வந்து சற்று நேரம் பேசி விட்டுச் செல்வார்கள். அவர்கள் வரும் போது கோபிக்குப் பிடித்த உணவை சமைத்துக் கொண்டு வந்து தருவர். கோபி அவர்கள் முன்னிலையிலேயே ஜானகி உனக்கு என்று தான் இவ்வாறு சமைக்க வருமோ என்று மட்டத் தட்டிப் பேசத் தவறுவதில்லை. அடுத்த விடுமுறை நாளில் பாலு போன் செய்து இன்று வரவில்லை என்றதும் கோபி ஆனந்தமடைந்து ஜானகியிடம் நான் வெளியே செல்கிறேன் எனக்கு மதிய உணவு வேண்டாமெனக் கூறினார்.

வீட்டை விட்டு வந்த கோபி மிகவும் ஆனந்தமாக நண்பருக்கு தொடர்பு கொண்டு ஒரு ஓட்டலுக்கு வரச் சொன்னார். அவர் வந்ததும் சாப்பாடு சாப்பிடுகையில் கோபி தனது பெருமைகளை அள்ளி வீசினார். தனது மனைவியை அடக்கி வைத்துள்ளதாக இறுமாப்புடன் கூற நண்பர் இது தற்காலிகம் தான் என்றார். வீட்டுப் பிரதாபங்களை பேசிய கோபியை அலுவலகம் பக்கம் திருப்பினார் நண்பர். சிறிது நேரத்தில் நண்பர் கிளம்ப, யோசனையில் ஆழ்ந்தார் கோபி.

மறுநாள் காலை தலைமையாசிரியர், அவர் மனைவி, ஜமுனா, பாலு இவர்கள் கைப்பேசிக்கு தலைமை யாசிரியரும் ஜானகியும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம் வந்தது. அதில் அனுப்பியவர் பாலு என்றிருந்தது.

தலைமையாசிரியரிடம் ஜானகி மற்றும் பாலு எங்களுக்கும் வந்துள்ளது என்று கூறினான்.

ஜமுனா ஜானகியைத் தொடர்பு கொண்டபோது எனக்கு நேற்று இரவு ஒரு அழைப்பு வந்தது. பேசிய நபர் என்ன நடக்கப் போகிறது பார். நான் வேடிக்கை பார்க்கும் மனிதனல்ல என்றார்.. மேற்கொண்டு நான் நீங்கள் யாரேனக் கேட்க அழைப்பு துண்டிக்கப்பட்டது. நான் நம்பரை அனுப்புகிறேன் என்றார்.

இரண்டு நான் கழித்து ஜானகி வீட்டிற்கு தலைமையாசிரியர், அவர் மனைவி, ஜமுனா, பாலு வந்த னர்.

ஜானகியிடம் உங்கள் வீட்டு விலாசத்தில் தான் அந்த நம்பர் பெறப்பட்டுள்ளது. மேற்கொண்டு தகுந்த ஆட்கள் கொண்டு டைம்லைனில் ஆராய்ந்து நடவடிக்கை எடுத்ததில் உங்கள் வீட்டுக்காரர் குரல் போலத்தானிருந்தது மற்றும் விண்ணப்பப் படிவம் உங்கள் வீட்டுக்காரர் கையெழுத்தை ஒத்துள்ளது என்றனர். மேற்கொண்டு காவல்துறையைத் தான் நாட வேண்டும் என்றனர்.

உடனே கோபி நான் தான் செய்தேன். என்னை மன்னித்து விடுங்கள் என்றான்.

ஜானகி,‘‘பொறாமைத் தீ என்றுமே பெருமை தேடித் தராது என்பதை என் கணவர் உணர்ந்திருப்பார்’’ என நம்புகிறேன் என்றாள்.

கோபி இனிமேல் இந்த மாதிரி தப்பை மறந்தும் செய்ய மாட்டேன் என்று கூறி கண் கலங்கினான்.

பாலு தப்பு செய்வது இயற்கை. அதை உணர்ந்து திருந்தினால் நன்று என்று தலைமையாசிரியர் கூறினார்., அவர் மனைவி ஜமுனாவை ஆதரவாகத் தொட்டாள்.

இதை இப்படியே விட்டு விடுகிறோம் என்று கூறினாள்.

ஜானகியை இனிமேலாவது பயத்தை விட்டு வெளியே வா என்று கூறினாள் ஜமுனா.

கோபிக்கு அடி மனதில் டைம் லைன் பற்றி தெரியாமல் போச்சே. எப்படியோ தப்பிவிட்டோம் என்று எண்ணியபடியே நிம்மதிப் பெருமூச்சு விட்டான் .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *