செய்திகள்

தென் தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஏப். 18–

தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:–

வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மாலைக்கு வாய்ப்புள்ளது. 20, 21ந் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியஸ் ஆகவும் குறைந்தபட்சம் 24 டிகிரி செல்சியஸ் இருக்கும்.

தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு கடற்கரை பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *