செய்திகள்

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத் தலைவராக பி.சி.ஸ்ரீராம், செயலாளராக பி.கண்ணன் தேர்வு

சென்னை, பிப். 12

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத் தேர்தலில் பி.சி.ஸ்ரீராம் அணியினர் வெற்றி பெற்றனர்.

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கான தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும். 2019 -2021 ஆண்டுக்கான நிர்வாகிகள் பொறுப்புக்கான தேர்தல், தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்க வளாகத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி நள்ளிரவு 12 மணி அளவில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டன.

தேர்தல் அதிகாரிகளாக கவிஞர் பிறை சூடன் தலைமையில், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் கே.வி. கன்னியப்பன், முனீர்அகமது, கஸ்தூரிமூர்த்தி கொண்ட நால்வர் குழு தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

பின்னர், பி.சி.ஸ்ரீராம் அணியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தார்கள்.

தலைவராக பி.சி.ஸ்ரீராம், துணைத் தலைவர்கள் -ஏ. கார்த்திக்ராஜா, எஸ்.சரவணன், பொதுச்செயலாளர் -பி.கண்ணன், துணைச்செயலாளர்கள் எம்.இளவரசு, ஏ . ஆரோக்கியதாஸ், யு.கே.செந்தில்குமார், பொருளாளர் -பி.பாலமுருகன் தேர்தெடுக்கப்பட்டனர்.

இந்த தேர்தலில், தலைவர் பி.சி.ஸ்ரீராம் கார்த்திக்ராஜா, சரவணன் ஆகிய மூவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அஜயன்வின்சென்ட், என்.கே.ஏகாம்பரம், என்.அழகப்பன், டி.கண்ணன், கே.ரவிஷங்கரன், ஜே.லஷ்மண்குமார், ஜே.ஸ்ரீதர், எம்.வெற்றிவேல், ஏ.வினோத்பாரதி, எஸ்.ஆர்ம்ஸ்ட்ராங், வி.இளம்பருதி, பி.காசிநாதன், ஜி.முருகன், சி.தண்டபாணி, எஸ்.அருண்குமார் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *