செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Makkal Kural Official

சென்னை, டிச. 16:

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (16–ந்தேதி) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் முதல் 22–ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.கோயம்பேடு, வடபழனி, கோடம்பாக்கம், எழும்பூர், பாரிமுனை, மயிலாப்பூர், அயனாவரம், வில்லிவாக்கம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் வடசென்னை பகுதிகளான வியசார்பாடி, வள்ளளார் நகர், திருவொற்றியூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *