செய்திகள்

தூய மரியன்னை பள்ளியில் விளையாட்டு விழா

புதுக்கோட்டை, ஜூலை.22–
புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி 34-ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பூண்டி புஷ்பம் கல்லூரி நிறுவனர் கிருஷ்ணசாமி வாண்டையார் பங்கேற்றார்.
புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியின் 34-ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் இராபர்ட் தனராஜ் தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் துரை.திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சோமசுந்தரம் வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவில் முதன்மை விருந்தினராக தடகளம், வளைப்பந்து மற்றும் கபடிக் கழக தலைவரும், பூண்டி புஷ்பம் கல்லூரி நிறுவனருமான கிருஷ்ணசாமி வாண்டையார் கலந்து கொண்டு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி வைத்து பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக கின்னஸ் சாதனையாளர்(3 முறை) பிரதீப் ரமேஷ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வாஞ்சிநாதன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சு.தங்கராஜ், உடற்கல்வி இயக்குநர்கள் ஜெயகரண் தங்கராஜ், கந்தசாமி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியினை பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் ஸ்ரீதர், சவரியப்பன் பிஞ்ஞேயிரா, இயைராஜா, அசோக் ஆகியோர் செய்திருந்தனர். நிறைவாக உதவி தலைமை ஆசிரியர் நன்றியுரையாற்றினார். விழாவில் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *