செய்திகள்

தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவிலும் விமானம் தரையிறங்கும் வசதி

தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவிலும் விமானம் தரையிறங்கும் வசதி:

தரம் உயர்த்தி விமானத்துறை அனுமதி

 

தூத்துக்குடி, ஜூலை.1–

தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவிலும் விமானம் தரையிறங்கும் வசதிக்கு இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

தூத்துக்குடி விமான நிலையத்திற்க்கான தகுதி சான்றை தரம் உயர்த்தி சிவில் விமானத்துறை அனுமதி அளித்துள்ளது, தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களுாரு உள்ளிட்ட இடங்களுக்கு உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே விமான போக்குவரத்து நடைபெற்று வந்தது. தற்போது, இரவு நேரத்திலும் விமான போக்குவரத்தை நடைமுறைப்படுத்தும் அளவுக்கு தூத்துக்குடி விமான நிலையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தூத்துக்குடி விமான நிலைய மேலாளர் ஜெயராமன் உடன் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேரங்களில் விமானங்கள் இயக்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இதற்காக 2 1/2 கோடி ரூபாய் செலவில் ஓடுபாதையை 280 மீட்டர் ஆக உயர்த்துதல் உள்ளிட்ட எட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இரண்டு லட்சத்து 36 ஆயிரம் பயணிகள் வந்து சென்றுள்ளனர். தற்போது 24 மணி நேரமும் விமானங்கள் இயக்கப்படுவதன் மூலம் தென்மாவட்டகளான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டத்தை சார்ந்த பொது மக்கள் வர்த்தகர்கள் பெருமளவில் பயனடைவார்கள்.

மேலும் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதன் மூலம் சர்வதேச அளவில் 321-ரக விமானங்களையும் தூத்துக்குடி விமான நிலையத்தில் கையாளமுடியும்.

மேலும் ஓடுபாதையை 3,115 மீட்டராக உயர்த்துவதற்கு பணி ஒதுக்கீடு மற்றும் ஒரே நேரத்தில் 600 பயணிகள் வந்து செல்லும் வகையில் பயணிகள் முனையத்தை 10,800 மீட்டர் சதுர பரப்பளவுக்கு அளவிற்கு விரிவாக்குத்தல், உள்ளிட்ட பணிகள் 380 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு கட்ட விரிவாக்க பணிகளில், ஓடு பாதையை விரிவாக்கும் பணிக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *