செய்திகள்

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதியில் தேர்தல் விழிப்புணர்வு மணல் சிற்பம்

தூத்துக்குடி, மார்ச்.11

தூத்துக்குடி மாநகராட்சி முத்துநகர் கடற்கரை பகுதியில் நாடாளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு மணல் சிற்பத்தினை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்து பார்வையிட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தேர்தல் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையிலும் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு இயந்திரம் (VVPAT) தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி முத்துநகர் கடற்கரை பகுதியில் நாடாளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அனைவரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் வாக்களிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் மணல் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மணல் சிற்பம் தேர்தல் நடைபெறும் வரையில் இருக்கும். இதனை பார்த்து பொதுமக்கள் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து வாக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும், பள்ளி, கல்லூரிகளில் வாக்குப்பதிவு குறித்து ரங்கோலி போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நரிக்குறவர் வாழும் இடங்களில் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு இயந்திரம் (VVPAT) தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னமே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.அனு, மாவட்ட வருவாய் அலுவலர் மு.வீரப்பன், வட்டாட்சியர் ஜாண்சன் தேவ சகாயம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *