செய்திகள்

தூத்துக்குடி சித்தர் பீடத்தில் உலக மக்கள் நலம் பெற வேண்டி சிறப்பு வழிபாடுகள்

தூத்துக்குடி, ஏப்.2–

இந்து அறநிலையத்துறை சார்பில் சிறப்புபெற்ற கோவில்களில் எல்லாம் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் தூத்துக்குடி சித்தர் பீடத்தில் உலக மக்கள் நலம்பெறவேண்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் மக்கள் தற்போதைய கொரோனா வைரஸ் தாக்கத்தால் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நாட்டு மக்களை பாதுகாத்திட ஏதுவாக இந்தியா முழுவதும் 21நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் துரித நடவடிக்கையால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் தகுந்த மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் இல்லாமல் போகவும் இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் அதில் இருந்து முழுமையாக குணமாகிடவும் மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் முழுமையாக மறைந்து மக்களின் மனம் அமைதி பெறவும் ஏதுவாக இந்து அறநிலையத்துறை சார்பில் சிறப்புபெற்ற கோவில்களில் எல்லாம் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போதைய சுழ்நிலையில் கோவில்களில் பக்தர்கள் கூட்டமாக சேர்ந்திடுவதை தடுத்திடும் நோக்கத்தில் இந்த சிறப்பு மஹா யாகம் வழிபாட்டில் அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்படி தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு சித்தர் நகரிலுள்ள மஹா பிரத்தியங்கராதேவி- மஹா காலபைரவர் ஆலயத்தில் மஹா யாக வேள்வியுடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு மஹா யாக வழிபாடுகளை சித்தர் பீடத்தின் சுவாமிகள் சீனிவாச சித்தர் தலைமையில் அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் சித்தர் பீடத்தின் சார்பில் சீனிவாச சித்தர் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்க்கும் வகையில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

சித்த மருத்துவ மருத்தான கபசுரக் குடிநீர் சுரணத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் பருகினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதன்மூலமாக இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ளலாம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *