செய்திகள்

தூத்துக்குடியிலிருந்து சிறப்பு ரயில் மூலம் பீகார் மாநில தொழிலாளர்கள் 1,389 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர்

தூத்துக்குடி, மே.17–

தூத்துக்குடி, திருநெல்நெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றி பீகார் மாநிலத்தை சோ்ந்த 1,389 தொழிலாளர்களை தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ஷார்மிக் சிறப்பு ரயில் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 962 தொழிலாளர்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 326 தொழிலாளர்கள், தென்காசி மாவட்டத்தில் உள்ள 101 தொழிலாளர்கள் என மொத்தம் 1,389 தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு வழி அனுப்பி வைத்தார்.

முன்னதாக தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு தேவையான உணவுகள், தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டது. மேலும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட பயணச்சீட்டு, ஆதார் கார்டு ஆகியவை பரிசோதனை செய்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர் மாவட்ட தூத்துக்குடி சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:–

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப்படி வெளி மாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி, திருநெல்நெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த 1,389 தொழிலாளர்களை தூத்துக்குடி ரயில் நிலையம் ஷார்மிக் சிறப்பு ரயில் மூலம் அவர்களை சொந்த ஊருக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ரயில் பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு இரண்டு தினங்களில் பீகார் சென்றடையும். குறிப்பாக நமது மாவட்டத்தில் உடன்குடி அனல்மின் நிலையம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் இந்த சிறப்பு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் நமது மாவட்டத்தில் இருந்து உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 500 தொழிலாளர்கள் திருநெல்வேலயில் இருந்து சிறப்பு ரயில் மூலம் தங்களது ஊருக்கு செல்வார்கள்.

நமது மாவட்டத்தில் 8,700 வெளி மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் மற்றும் தங்களது ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ள நபர்களை இன்று சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல 4,700 பிற மாநில தொழிலாளர்கள் இணைதளம் மூலம் பதிவு செய்துள்ளார்கள். ஏற்கனவே பீகார், ஜார்கண்ட் மாநிலங்களை சேர்ந்த சுமார் 400 தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திருநெல்வேலியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று பயணம் செய்யும் பீகார் மாநில தொழிலாளர்களுக்கு வழியில் ரயில்வே துறை மூலம் உணவு, குடிநீர் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள தொழிலாளர்களையும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன், மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் விஷ்ணுசந்திரன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்கள் அமுதா, பாலசுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கரநாராயணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள் ) உமாசங்கர், ரயில்வே முதுநிலை வர்த்தக மேலாளர் பிரசன்னா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மரு.மாரியப்பன், வட்டாட்சியர்கள் செல்வகுமார், ரகு, மாநகராட்சி உதவி பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன், உதவி ஆணையர் தனசிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் விநாயசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பானு, மாணிக்கவாசகம், சசிகுமார் மற்றும் அரசு அலுவலர்கள், ரயில்வே துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *