வாழ்வியல்

தூதுவளையில் உள்ள மருத்துவ குணங்கள்–1

தூதுவளையானது, உடல்வலிக் கோளாறு, நுரையீரல் கோளாறுகளைக் குணப்படுத்தும் பூ. இதை உட்கொண்டால், உடல் பெருக்கும் என்பதோடு, ஆண்மை பெருகும், வலு கிடைக்கும். தூதுவளை காயை உலர்த்தி தொடர்ந்து சாப்பிட்டு வர, குடல் நோய்கள் தீரும், அழற்சி நீங்கும், வாயு தொந்தரவும் விலகும்.

தூதுவளையில், கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால், எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளைக் கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து, நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். வாதம் மற்றும் பித்தத்தால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த, மிளகு கல்பகம் 48 நாட்கள் சாப்பிட்டபின், தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், வாத, பித்த நோய்கள் தீரும்.

தூதுவளையை, நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொண்டு, காலை, மாலை என இருவேளையும் தேனில் கலந்து பத்தியம் இருந்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால், இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும்.

தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால், தலையில் உள்ள கபம் குறையும். காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்தாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *