செய்திகள்

துருக்கி, சிரியா நிலநடுக்கப் பேரழிவு: ஸ்டாலின் வேதனை

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுகோள்

சென்னை, பிப்.7–

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் வேதனை தருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:–

‘துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கங்கள் ஏற்படுத்தியுள்ள பேரழிவை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். இதனால் ஏற்பட்டுள்ள மிகப் பெரும் அளவிலான உயிரிழப்புகள், காயங்கள் மற்றும் சேதங்கள் வேதனையளிக்கிறது. இந்தத் துயர்மிகு நேரத்தில் என் இதயம் பாதிக்கப்பட்ட இரு நாடுகளின் மக்களுக்காக இரங்குகிறது. நாம் அனைவரும் ஒருமித்து நின்று பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவோமாக’.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *