செய்திகள்

துப்புரவு பணியாளர்களுக்கு மளிகை சாமான்களை கொடுக்க விரும்பிய திருச்சி தொழிலதிபர்

சின்னாளப்பட்டி, ஏப்.11–

திண்டுக்கல் ஒன்றியத்திலுள்ள அணைப்பட்டி, மானா மூனா கோவிலூர், குரும்பபட்டி முள்ளிப்பாடி, தாமரைப்பாடி, உள்ளிட்ட ஐந்து ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் சண்முகம் என்பவர் மளிகை சாமான்களை வழங்கவிரும்பினார்.

அதன்படி மளிகை பொருட்களை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணனிடம் ஒப்படைத்தார் அவர். ஐந்து ஊராட்சிகளுக்கும் சென்று தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை துப்புரவு பணியாளர்களுக்கு மனதை மற்றும் அரிசி பருப்பு சாமான்களை வழங்கினார். நிகழ்ச்சியில் குரும்பபட்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், மானா மூனா கோவில் ஊராட்சிமன்ற தலைவர் நாகராஜ், முள்ளிப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் மாதவி, தாமரைப்பாடி ஊராட்சி மன்ற தலைவி அமர்ஜோதி, மற்றும் ஊராட்சி செயலாளர்கள்அணைப்பட்டி ஜோதி, மானா மூனா கோவிலூர் கோபால் குரும்பபட்டிஊராட்சி பொறுப்பு செயலாளர்குமார், முள்ளிப்பாடி ஊராட்சி செயலாளர் வசந்தகுமார், தாமரைப்பாடி ஊராட்சி மன்ற செயலாளர் சக்தி உட்பட பலர் கலந்துகொண்டனர். நிவாரணப் பொருட்களை பெற்று கொண்ட பணியாளர் மற்றும் தூய்மை காவலர்கள் தொழிலதிபர் சண்முகத்திற்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணனுக்கும் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *