செய்திகள்

துப்பாக்கியால் தன்னைத் தானே தலையில் சுட்டுக் கொண்ட போலீஸ் ஏட்டு கவலைக்கிடம்

டெல்லி, ஆக. 16–

டெல்லியிலுள்ள போலீஸ் ஏட்டு ஒருவர், இன்று காலையில் தன்னை தானே துப்பாக்கியால் தலையில் சுட்டு கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்கு டெல்லியில் உள்ள வசந்த் விகார் என்னும் பகுதியில், 35 வயதுடைய ராகேஷ் எனும் தலைமை காவல் அதிகாரி, தலையில் துப்பாக்கி வைத்து சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக, காவலர் ராகேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருதாகவும், தலைமைக் காவலர் ராஜேஷின் உடல் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கவலைக்கிடம்

இது குறித்து தெரிவித்துள்ள துணை போலீஸ் கமிஷனர் இங்கித் பிரதாப் சிங், வசந்த் விகார் காவல் நிலையத்தில் இன்று காலை 6 மணி அளவில் தலைமை காவலர் ராஜேஷ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவலர்கள் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

மேலும் அவரது தலையின் வலது பக்கமாக சுட்ட துப்பாக்கிக் குண்டு, தலையின் இடதுபுறம் வழியாக வெளியேறி உள்ளதால் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *