அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்
துபாய், நவ.14-–
துபாயில் நிறுவப் பட்டுள்ள பிரமாண்ட மான முகம்மது பின் ராஷித் நூலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் 1,000 புத்தகங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.
தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக நடைபெற்ற வினாடி–-வினா நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளிகளில் படிக்கும் 67 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் சுற்றுலாவுக்காக துபாய் வந்தனர்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் வருகை புரிந்த அந்த மாணவர்கள் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்தனர். முதலாவதாக அபுதாபியில் உள்ள லவுரே அபுதாபி அருங்காட்சி யகத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் சார்ஜாவில் நடைபெற்று வந்த 41-வது சர்வதேச புத்தக கண்காட்சியிலும் கலந்து கொண்டனர். கண்காட்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல்வேறு தமிழ் அரங்குகளை பார்வை யிட்டார். அதையடுத்து நேற்று முன்தினம் நட்சத்திர ஓட்டலில் மாணவ, மாணவிகளுடன் இரவு உணவு விருந்து நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அவருடன் இந்திய துணைத்தூதரக அதிகாரி கே.காளிமுத்து, தொழிலதிபர் நோபிள் மெரைன் சாகுல் ஹமீது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு நேற்று துபாயில் உள்ள எதிர்கால அருங்காட்சியகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவ, மாணவிகளுடன் பார்வையிட்டார். அப்போது மாணவர்கள் அங்குள்ள எதிர்கால தொழில் நுட்பங்கள், சுற்றுச்சூழல், உயிரியல் போன்ற துறைகளின் டிஜிட்டல் காட்சியமைப்புகளை பார்த்து வியந்தனர்.
அதேபோல் உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபாவையும் மாணவர்கள் சென்று பார்த்தனர். துபாயில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்ட மான புத்தக வடிவிலான முகம்மது பின் ராஷித் நூலகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் ஆயிரம் புத்தகங்களை அன்பில் மகேஸ் பொய்யா மொழி அன்பளிப் பாக வழங்கி னார். தமிழக மாணவர்கள் அந்த நூலகத்தை சுற்றிப்பார்த்தனர்.