செய்திகள்

துபாயில் காணாமல் போன இந்தியர் பிணமாக மீட்பு

மங்களூர், மார்ச் 10–

துபாயில் காணாமல் போன இந்தியர் பிணமாக மீட்கப்பட்டார்.

கர்நாடக மாநிலம் பந்த்வால் தாலுகா, நர்ஷா பொலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்தாலிப். பொறியியல் படித்துவிட்டு, துபாயில் பணியாற்றி வந்த முத்தாலிப், செய்தித்தாள்களிலும் கட்டுரைகள் எழுதி வந்துள்ளார். சில நாள்களாக முத்தாலிப்பின் செல்போன் சுவிட்ஜ் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால், அவரைத் தொடர்பு கொள்ள முடியாமல் குடும்பத்தினர் கவலை அடைந்தனர். இதைத் தொடர்ந்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

இந்த நிலையில், துபாயில் உள்ள அல்-ரபா பகுதியில் ஆண் பிணம் மீட்கப்பட்டது. பாஸ்போர்டினட அடிப்படையில் அது முத்தாலிப்பின் உடல் என்பது அடையாளம் காணப்பட்டு இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது உடல் துபாய் ரஷித் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவர் மரணம் அடைந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *