செய்திகள்

துனிசியாவில் யூத வழிபாட்டுத் தலத்தில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

துனிசியா, மே 10–

துனிசியாவின் டிஜெர்பா அருகே உள்ள யூத வழிபாட்டு தலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானார்கள்.

துனிசியாவில் யூத வழிபாட்டுத் தலத்தில் பலர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவலாளி ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சூட்டதில் சக காவலர்கள் இரண்டு பேரும், பொதுமக்களில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

வழிபாட்டுத் தலத்தை பூட்டி அனைவரையும் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள அந்த காவலாளிடம் இருந்து அவர்களை மீட்கப்பதற்காக சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி வந்தனர்.

இதில், அந்த காவலாளி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அனைவரும் விடுக்கப்பட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *