சிறுகதை

துணிச்சல் ராணி! – சோபியா ஜான், (குரோம்பேட்டை, எஸ்.டி.என்.பி. மகளிர் வைணவ கல்லூரி, முதுகலை இதழியல் மாணவி)

அலுவலகம் முடிந்து வெளியே வரும்போது இரவு எட்டு மணி. ஐயோ! லேட் ஆகிடுச்சு என பேருந்து நிலையத்திற்கு வேகமாக சென்று கொண்டிருந்தாள் ராணி. ராணி பி.ஏ பட்டதாரி, வயது இருபத்தாறு. வீட்டுக்கு தாமதமாக வரும் தகவலை சொல்லியாச்சு என்ற நிறைவுடன் பேருந்துக்காக காத்திருந்தாள்.

அரை மணி நேரம் கழித்துதான் பேருந்து வந்தது… எப்படியோ அடித்துப் பிடித்து ஏறி ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்தாள்.

வீட்டுக்குச் சென்று சேர ஒரு மணி நேரம் ஆகும் என்பதால், தனது பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தாள்.

பேருந்து நடத்துனர் “மா..! இந்தா பிடி உன் டிக்கெட்டை…” என கட்டணமில்லா டிக்கெட்டை கையில் திணித்துவிட்டுச் சென்றார்…

கல்லூரி மாணவி நிஷா பக்கத்து இருக்கையில் இருந்தாள்….

“அக்கா!. நேரம் என்ன ஆகுது?” னு கேட்க, “ஒன்பது மணி ஆக போகுதுனு…” சொல்லிட்டு மீண்டும் புத்தகத்தை படித்தாள் ராணி.

ரொம்ப நேரமா அப்படி என்ன படிக்கிறாங்கனு எட்டி பார்த்தாள்…. “தற்காப்புக் கலையின் நன்மைகள் “என்ற புத்தகம் என்பதை அறிந்தாள்.

நிஷாவுக்கு நேரம் போகவில்லை ..ஏன்! இந்தப் புத்தகத்தை படிக்குறீங்க… என்று ராணியிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டனர். அப்போதுதான் இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது …

ஏங்கா…தற்காப்பு கலைன்னா ரொம்ப பிடிக்குமா? என நிஷா கேட்க, பொதுவாக எனக்கு புத்தகம் படிப்பது மிகவும் பிடிக்கும். அதனால் படிக்கிறேன் என்று ராணி கூறினாள்.

இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது… ராணியும் நிஷாவும் ஒரே பகுதி என்பதனால் பேருந்தில் இருந்து இறங்கி ஒன்றாக பேசிக்கொண்டே சென்றனர்.

இரவு ஒன்பதரை ஆகி விட்டது… மிகவும் இருளடைந்த ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டு இருந்தனர்.

அந்தப் பகுதியில் ஒரு பழைய பாழடைந்த கட்டிடம்.. அங்கு எப்போதும் மயான அமைதியாக இருக்கும்…

இங்கே யாராவது பதுங்கி இருந்தால்கூட நமக்கு தெரியாது நிஷா! எனவே வேகமா நடப்போம்… என சொல்லிக் கொண்டே இருக்கும் சமயத்தில், தடியுடன் வந்த நான்கு மர்ம நபர்கள்… “உங்கள் நகைகளைக் கழட்டிக் கொடுங்க… இல்லன்னா உங்களை சும்மா விட மாட்டேன்” என்று மிரட்டினார்கள்.

பதட்டமடைந்த இருவரும் வெளிச்சம் இருக்கும் இடத்தை நோக்கி விறுவிறுவென வேகமாக நடந்தனர். இவர்கள் நிற்காமல் சென்றதால் கோபம் அடைந்த வழிப்பறி கொள்ளையர்கள், ஓடி வந்து சுற்றி வளைத்தனர்.

உடனே ராணி தனது பையை வேகமாய் திறந்து…. ”நிஷா கண்ணை மூடிக்க…” என்றாள்.

நிஷா கண்களை மூடிக்கொண்டே தனது பையிலிருந்து செல்போனை எடுத்து போலீசுக்கு தகவல் கூறினாள்.

ராணி நொடிப்பொழுதில் தனது பையில் இருந்த ‘பெப்பர் ஸ்பிரே’ வை எடுத்து, அந்த நான்கு பேர் முகத்திலும் சுற்றிச் சுற்றி அடித்தாள்… நான்கு பேரில் மூன்று பேரின் கண்களில் ‘பெப்பர் ஸ்பிரே’ பட்டது. உடனே மற்றொரு மர்ம நபர் கோபத்துடன் இருவரையும் தாக்க முயற்சி செய்தான்.

அச்சமயத்தில் தாக்க வந்த மர்ம நபர்கள் கொண்டு வந்த ஒரு தடி, ராணிக்கு கிடைத்தது. அந்த தடியை வைத்து தற்காப்பு கலை வீராங்கனையான ராணி, சிலம்பம் சுழற்றி அந்த கொள்ளையனை விரட்டி விரட்டி அடித்தாள்.

அப்போது… போலீசார் விரைந்து வந்து வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்தனர்.

அங்கு வந்திருந்த மகளிர் போலீசார் ஒருவர்…. இருவருக்கும் தண்ணீரைக் குடிக்க கொடுத்தார்.

இந்த இடத்தில் என்ன வேலை ஏன்? இப்படி கண்ட நேரத்துல வரீங்க என கேட்டார். அதற்கு ராணி ” அலுவலகத்தில் வேலை அதிகம் அதனால தான் இன்னைக்கு தாமதம் ஆயிடுச்சு! இல்லனா இப்படியாக வாய்ப்பில்லை சீக்கிரம் தெரு விளக்குகளை சரி பண்ணுங்க” என்று தனது கோரிக்கையை வைத்தாள்.

அந்த மகளிர் போலீசார் நல்ல வேல உனக்கு சிலம்பம் தெரிஞ்சு அதனால தப்பிச்ச?

இல்லன்னா என்ன ஆகியிருக்கும்? பரவால்ல உனக்கு தைரியம் அதிகமாக இருக்கு என பாராட்டிய போலீசார், ஒரு தனி வண்டியை ஏற்பாடு செய்து இவர்களை வீட்டுக்கு பத்திரமாக அனுப்பி விட்டனர்.

வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் நிஷா; ராணியிடம் அக்கா இதெல்லாம் எவ்வளவு தைரியமா சந்திக்கிறீர்கள்?உண்மையிலேயே நீங்க சூப்பர் என்று பாராட்டினார். ”நாம் முன்பு போல இல்லை ஏதாவது ஒரு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற காலக் கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே ஒரு தற்காப்புக் கலையைக் கற்றிருப்பது நமக்கு பாதுகாப்பானது’ “தன் கையே தனக்கு உதவி” என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு கலையை கற்றுக் கொள்ள வேண்டும் எந்த ஒரு சூழ்நிலையிலும் துணிச்சலுடனும் செயல்பட வேண்டும். உனது நண்பருக்கும் நீ இதை சொல்லணும், நமது பையில் எங்கும் எப்போதும் பாதுகாப்பான பொருட்கள் இருக்கணும் “சிறு துரும்பும் பல் குத்த உதவும் “”என்பது போல சிறிய சட்டை பின் கூட உனக்கு ஆயுதமாக மாறக்கூடும் என்று தைரியப் படுத்தினார்”.

இருவரும் பத்திரமாக வீட்டுக்கு சென்றனர். மறுநாள் காலையில் ராணியின் வீட்டு வாசலிலே பத்திரிக்கையாளர்கள் இருப்பதை கண்டு என்ன ஆச்சு.. இங்க எதுக்குகூட்டம் என கேட்க, ” நேற்று இரவு நீங்கள் செய்த சம்பவம் அந்தப் பகுதி கேமராக்களில் பதிவாகி, சமூகவலைத்தளங்களில் வைரலாகி உள்ளது .இதனை மக்கள் பெரியளவில் வரவேற்கின்றனர்….வாழ்த்துக்கள் என கூறி,நேர்காணலை எடுத்து முடித்தனர். இந்த நேர்காணலை பார்த்தபெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளுக்கும் இந்த கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என சிந்தித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.